மேலும் அறிய

Vijay Cabinet: அனுபவமில்லாத அமைச்சரவை.! முதலமைச்சராக விஜய்.! - எதிர்கொள்ளவுள்ள சவால்கள் என்ன.?

Vijay New Cabinet Ministers: தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவர் முன் பல சவால்கள் காத்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பெரிய தடையாக உள்ளது. அடுத்தாக தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சியை பிடித்த தவெக

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், 59 ஆண்டுகால திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை பிடித்துள்ளது. இதில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.  ஆனால் ஆட்சி அமைக்க 118 இடங்களை தேவை என்ற நிலையில்,  கடந்த 4 நாட்களாக தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க தவெக திணறியது. கடைசியாக திமுகவின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவோடு ஆளுநரை சந்தித்த நிலையில், ஆளுநர் தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

அனுபவமில்லாத அமைச்சரவை

இதனையடுத்து இன்று காலை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கு அடுத்தடுத்த பல சவால்கள் எதிர்கொள்ளவுள்ளார். அந்த வகையில் செங்கோட்டையனை தவிர்த்து முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரும் ஆட்சி அதிகாரத்தில் புதிது என்பதால் என்ன செய்யப்போகிறார்.? எப்படி சமாளிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

அந்த வகையில் தமிழக அரசு ஏற்கனவே நிதி பற்றாக்குறையால் திணறி தவித்து வருகிறது. 2026-27 இடைக்கால நிதிநிலை அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் மொத்தக் கடன் நிலுவை சுமார் ₹10.71 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தவெக தேர்தல் வாக்குறுதி

இந்த நிலையில் தவெக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, உயர்ந்து வரும் விலைவாசி மற்றும் இந்த கடன் சுமைக்கு இடையே நிதி நிர்வாகம் செய்வது சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் தனது முதல் கையெழுத்தாக மகளிர்களுக்கு இலவச பேருந்து திட்டமான வெற்றி பயண திட்டத்திற்கு கையெழுத்திடவுள்ளார். இந்த திட்டத்தில் மூலம் மாவட்டம் முழுவதும் இலவசமாக பேருந்தில் பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டவுள்ளது.

ஏற்கனவே பல ஆயிரம் கோடி இழப்பில் உள்ள போக்குவரத்து கழகம் இந்த புதிய இலவச திட்டத்தின் மூலம் மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என கூறப்படுகிறது. அடுத்தாக தமிழகம் முழுவதும் 200 யூனிட் மின்சார திட்டத்தையும் செயல்படுத்தவுள்ளார்.

நிதி பற்றாக்குறையில் தமிழகம்

ஏற்கனவே தமிழக மின்வாரியத்தின் கடன் சுமை சுமார் ₹1.5 லட்சம் கோடி முதல் ₹1.8 லட்சம் கோடி வரை அதிகரித்துள்ளது. இந்த நிதி நெருக்கடியால் ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வட்டி மட்டுமே செலுத்தும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் தவெகவின் தேர்தல் வாக்குறுதியான 200 யூனிட் இலவச மின்சார திட்டம் மேலும் மின்வாரியத்தை மோசமான நிலைக்கு தள்ளும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சமாளிப்பாரா விஜய்.?

அடுத்தாக மகளிர்களுக்கு மாதம் 2,500 ரூபாய் திட்டமும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்த்து எழுந்துள்ள நிலையில், உடனடியாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடியுமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.2,500, முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் என பல வாக்குறுதிகளும் வரிசைகட்டியுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள விஜய், சபாநாயகர் தேர்வு முதல் சட்டங்களுக்கு அனுமதி பெறுவதை வரை பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. 

இது மட்டுமில்லாமல் மத்திய அரசிடம் இருந்தும் நிதி கிடைப்பதிலும் சிக்கல்கள் உள்ளது. இந்த நிலையில் எதிர் வரும் சவால்களை விஜய் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
Embed widget