கிட்னி செயலிழப்பு அறிகுறிகள்.. இந்த மாற்றங்கள் தெரிந்தால் உஷாராக இருங்க..

Published by: கு. அஜ்மல்கான்

சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் உடலில் கழிவுகள் தேங்கும். இதனால் எப்போதும் சோர்வு, களைப்பு, பலவீனம் ஏற்படும்.

சிறுநீர் அதிகமாக வருதல், மிகக் குறைவாக வருதல், நுரை போன்று காணப்படுதல் அல்லது நிறம் மாறுதல் சிறுநீரகப் பிரச்சினைகளின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

சிறுநீரகங்கள் அதிகப்படியான திரவத்தை வெளியேற்ற முடியாவிட்டால் கால்கள் கைகள் மற்றும் முகத்தைச் சுற்றி வீக்கம் ஏற்படும்.

கனிமங்களின் சமநிலையின்மை ஏற்பட்டால் சருமம் வறண்டு, அதிக அரிப்பு ஏற்படலாம்.

சிறுநீரகங்கள் பலவீனமடைந்தால் செரிமானத்தின் மீது பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாக பசி குறைதல், வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படலாம்.

உடலில் திரவங்கள் தேங்குவதால் சுவாசிப்பது சிரமம் ஏற்படுத்தும்

இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் சிறுநீரகப் பிரச்சினைகளின் ஆரம்ப அறிகுறியாகக் கருதப்படுகிறது.

Electrolyte Imbalance கால்களில் பிடிப்பு மற்றும் தசைப்பிடிப்பு ஏற்படலாம்.

காலை எழுந்தவுடன் கண்களைச் சுற்றி வீக்கமாக இருந்தால் அது சிறுநீரகங்கள் புரதத்தை சரியாக வடிகட்டாததால் இருக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம் அல்லது கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.