புத்தாண்டு வாழ்த்து சொன்னார்களா? மோடி, ஸ்டாலின், விஜய்
Tamil New Year 2025 Wishes: தமிழ்நாட்டில் இன்று புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், தவெக தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லை.

மறைமலை அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் அடங்கிய கூட்டமைப்பின் ஆய்வை அடிப்படையாக தமிழ்நாட்டில் தை 1 ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்தார், திமுக தலைவராக இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இதையடுத்து, இந்த முறையானது 2008 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து, 2011 ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற அதிமுகவின் தலைவராக இருந்த ஜெயலலிதா, சித்திரை 1 ஆம் தேதியை புத்தாண்டாக அறிவித்தார்.
இதையடுத்து 2021 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்த திமுக, சித்திரை முதல் நாளை புத்தாண்டு தினத்தில் இருந்து மாற்றுவது குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை. இதனால், தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி சித்திரை 1 ஆம் தேதியே தமிழ் புத்தாண்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், தவெக தலைவர் விஜய் என்ன சொல்லியிருக்கிறார்கள் என பார்ப்போம்.
எடப்பாடி பழனிசாமி:
இந்நிலையில், அதிமுகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நன்னாளில், அன்பிற்கினிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) April 14, 2025
எனதருமை தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக பன்னெடுங் காலமாய்க்… pic.twitter.com/JDbONJTyAr
பிரதமர் மோடி:
மேலும், பிரதமர் மோடியும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Puthandu greetings to everyone! pic.twitter.com/8H98EFIYms
— Narendra Modi (@narendramodi) April 14, 2025
முதலமைச்சர் ஸ்டாலின்:
இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரை அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ் புத்தாண்டு தெரிவித்ததாக தகவல் கிடைக்கவில்லை. கிடைத்தால் , அதற்கு பிறகு இந்த செய்தி மாற்றியமைக்கப்படும்.
தவெக தலைவர் விஜய்:
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லை, ஆனால் சித்திரை திருநாள் வாழ்த்துகள் என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்!
— TVK Vijay (@TVKVijayHQ) April 14, 2025
இந்நிலையில், ஒரு தரப்பினர் தை 1 என்றும், சில தரப்பினர் சித்திரை 1 என்றும், தமிழ் புத்தாண்டு தினமானது அரசியல் ரீதியான சிக்கல்களுக்குள் சிக்கி கொண்டது என்றே சொல்லலாம்.
Also Read: Tamil New Year 2025: சித்திரையா, தையா: தமிழ் புத்தாண்டு எது? அறிவியல் சொல்வது என்ன?

