மேலும் அறிய

Peter Alphonse : ”தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம் என்ற காங்கிரஸ்” அரசு பதவியை நீட்டிக்காத முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பதவியில் கத்தொலிக்க திருச்சபையை சேர்ந்த ஜோ அருண் என்பவரை நியமித்துள்ளார் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் விரைவில் காமராஜர் ஆட்சி, 2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் பேசிவந்த நிலையில், காங்கிரஸ் கட்சி எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஒரு பதவியை வேறு ஒருவருக்கு ஒதுக்கி, ஓவராக பேசாதீர்கள் என செக் வைத்துள்ளார் ஸ்டாலின்.

2026 தேர்தலுக்கான வேலையை இப்போதே தொடங்கிய திமுக

நாடாளுமன்ற வெற்றியை தொடர்ந்து தன்னுடைய முழு கவனத்தையும் 2026 சட்டமன்ற தேர்தலில் நோக்கி திருப்பியுள்ளார் ஸ்டாலின். இன்னும் தேர்தலுக்கு 20 மாதங்கள் இருக்கும் நிலையில், திமுகவின் சட்டமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து தற்போதே பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. 

மூத்த அமைச்சர்களான கே என் நேரு, ஏவ வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ள அந்த குழு அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே  ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதன் பின் 234 தொகுதியின் பார்வையாளர்களையும் அழைத்து தன்னுடைய குறிஞ்சி இல்லத்தில் விருந்து வைத்து சிறப்பாக கவனித்து அனுப்பியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். 

இதில் முக்கியமாக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற காரணமாக இருந்த திமுகவின் தொகுதி பார்வையாளர்களை பாராட்டவும், 2026 தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று பூஸ்ட் கொடுத்துள்ள உதயநிதி, தேவைப்பட்டால் கூட்டணியின்றி தனியாக போட்டியிடவும் நேரிடும் என்ற ஒரு ஹிண்டை கொடுத்துள்ளார். 

தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருந்தாலும், தற்போதே ஒருங்கிணைப்புக் குழு, ஆலோசனைக் கூட்டம், பார்வையாளர்களுக்கு அழைப்பு, கூட்டணியின்றி போட்டி என எடுத்த எடுப்பில் டாப் கியரில் பயணிக்க தொடங்கியுள்ள திமுகவை கண்டு அதிமுக மட்டும் இன்றி திமுக கூட்டணி கட்சிகளே அதிர்ந்து போயிருக்கின்றன.

தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம் என்ற செல்வபெருந்தகை

அண்மைக்காலமாக திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியின் body language சற்று மாறி உள்ளதை தெளிவாக பார்க்க முடிகிறது. குறிப்பாக விரைவில் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி என்று மாநில காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகை ஒவ்வொரு மீட்டிங்கிலும் பேசி வருகிறார். எத்தனை காலம் இப்படியே இருக்க போகிறோம் என்று அதிரடியாக பேசும் செல்வபெருந்தகை காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். இன்னோரு பக்கம் 2026 தேர்தலுக்குப் பின், ஆட்சியிலும் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும் என்று எம்பி கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளதையும் திமுக தலைமை ரசிக்கவில்லை. இந்நிலையில் தான் 2026 தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளை கேட்டு நிச்சயம் காங்கிரஸ் குடைச்சல் கொடுக்கும், அவர்களை இப்போதே அடக்கி வைக்க வேண்டும் என்று திமுக சீனியர்கள் சிலர் தலைமையிடம் குமுறியுள்ளனர்.

பீட்டர் அல்போன்ஸ் பதவி நீட்டிக்கப்படவில்லை

அதை தொடர்ந்து தான் சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பதவியில் கத்தொலிக்க திருச்சபையை சேர்ந்த ஜோ அருண் என்பவரை நியமித்துள்ளார் ஸ்டாலின். தற்போது காங்கிரஸை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் வகித்து வரும் பதவி காலம், வருகிற ஜூலை 28ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மீண்டும் அவருடைய பதவி காலம் நீட்டிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள ஸ்டாலின், அதை கட்சி சாராத ஒருவருக்கு வழங்கி காங்கிரஸுக்கு செக் வைத்துள்ளார். மேலும் காங்கிரஸ் ஓவராக ஆட்டம் காட்டினால் 2026 தேர்தலில் தனித்து போட்டியிடவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று மெசெஜும் திமுகவினர் மத்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.

திமுக தான் எப்போதும் தலைமை

ஸ்டாலினின் நம்பிக்கை ஒன்று தான், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் இருக்கும் 234 சட்டமன்ற தொகுதிகளையும் பிரித்துப் பார்த்தால், அதில் 221 தொகுதிகளில் திமுக கூட்டணி ரேசில் முன்னிலையில் இருக்கிறது. இந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில், 2026 தேர்தலில் திமுகவே அதிகப்படியான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் ஸ்டாலின்.

ஏனென்றால் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டாலும், முழு தேர்தல் பணிகளையும் திமுகவே அந்த தொகுதிகளிலும் பார்த்து கொள்கிறது, அப்படி இருக்கையில் அதிக தொகுதிகளில் போட்டியிட்டால் அது திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும்.

அதே நேரம் கூட்டணியில் சிலர் வெளியேறி விடுவோம் என்று ஆட்டம் காட்டினாலும் எப்படி 2016 இல், மக்கள் நல கூட்டணி அமைந்ததால், தனித்து போட்டியிட்டு ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தாரோ, அதேபோன்று இம்முறையும் அதிமுக, பாஜக தனித்தனியே போட்டி, இன்னொரு பக்கம் சீமான், விஜய் ஆகியோர் களம் இறங்கினால், நிச்சயம் வாக்குகள் சிதறும். அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார் ஸ்டாலின்.

அதனால் கூட்டணி கட்சிகள் போனாலும் பரவாயில்லை தனித்து போட்டியிட்டு வெல்ல முடியும் என்று உறுதியாக நம்பும் ஸ்டாலின், தேர்தலுக்கு இன்னும் பல மாத காலம் காலம் இருக்கும் நிலையில் தற்போதே தேர்தல் பணிகளை வேகமாக முடுக்கி விட்டு போட்டி தொடங்குவதற்கும் முன்பே ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.'

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Embed widget