மேலும் அறிய

TN Cabinet Reshuffle : “தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம்” தேர்தலில் சரியாக வேலை செய்யாதவர்களுக்கு வயிற்றில் கரைகிறது புளி..!

’நாடாளுமன்ற தேர்தலில் சரியாக பணியாற்றாத நிர்வாகிகள், கூட்டணி கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்காத மாவட்ட செயலாளர்கள் பட்டியலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது’

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு அமைச்சர்கள் எல்லாம் சைலண்ட் மோடிற்கு போய்விட்டார்கள். தலைமைச் செயலகத்திலும் பலரை பார்க்க முடிவதில்லை. தேர்தல் பணியாற்றிய களைப்பில் ஓய்வெடுக்கச் சென்றாலும் சிலரது வயிற்றில் புளி கரைந்துக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம், அமைச்சரவையில் மறுபடியும் ஒரு மாற்றத்தை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் தயாராகியிருப்பதுதான்.TN Cabinet Reshuffle :  “தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம்” தேர்தலில் சரியாக வேலை செய்யாதவர்களுக்கு  வயிற்றில் கரைகிறது புளி..!

’40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்பது மு.க.ஸ்டாலினின் உத்தரவு’

கடந்த 2019ல் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி, தேனி தவிர்த்து 38 தொகுதிகளிலும் வென்றது. இப்போது திமுக ஆளுங்கட்சியாக இருக்கிறது. கடந்த தேர்தலை காட்டிலும் புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளில் திமுக ஜெயித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 40க்கு 40 என்பதைதான் தேர்தலுக்கு முந்தைய நாள் வரை மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுக்கு முதல்வர் வலியுறுத்தி வந்தார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியபோது கூட, உங்களுக்கு பொறுப்புள்ள தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தால் உங்கள் பதவியையும் இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

’உளவுத்துறை அளித்த ரிப்போர்ட் – அதிர்ச்சியில் அமைச்சர்கள்’

அதன்படி, தேர்தல் முடிந்த கையோடு உளவுத்துறை ரிப்போர்ட்டையும் கேட்டு வாங்கிய முதல்வர் ஸ்டாலின், வெற்றி வாய்ப்பு கஷ்டம் என்ற தொகுதிகளின் பட்டியலை படித்த பிறகு அந்த தொகுதிகளுக்கு பொறுப்புள்ள அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசியுள்ளார். அன்று அவர் பேசியதான் அமைச்சர்கள் வயிற்றில் இன்று வரை புளி கரைந்துக்கொண்டிருக்கிறது. எக்ஸாம் எழுதிவிட்டு, ரிசல்ட்டிற்காக காத்திருக்கும் மாணவர்களை போல, தேர்தல் முடிவுகளுக்காக தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அமைச்சரவையே காத்துக் கிடக்கிறது.

’பதவி இழப்பும் நடக்கலாம், கூடுதல் பொறுப்பும் கிடைக்கலாம்’

அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றால் அந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்போ அல்லது வேறு முக்கிய துறையோ ஒதுக்கவும், வெற்றி வாய்ப்பை இழந்தால் அந்த தொகுதியின் பொறுப்பு அமைச்சர்களின் பதவியை தயவு தாட்சண்யம் இன்றி பறிக்கவும் முதல்வர் ஸ்டாலின் இப்போதே தாயாராகிவிட்டார். உளவுத்துறையின் ரிப்போர்டை வைத்தும் தன்னுடைய கட்சி நிர்வாகிகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை அடிப்படையிலும் இந்த மாற்றத்தை ஏற்படுத்த ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார். அதே நேரத்தில், தற்போதைய ரிபோர்டுக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வந்தால், சில அமைச்சர்களின் தலை தப்பிக்கும். இல்லையென்றால், அவர்கள் மாற்றப்படுவது உறுதி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

’உளவுத்துறை ரிப்போர்ட் சொல்வது என்ன?’

13 தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பு கடினமாக இருக்கும் என்று உளவுத்துறை உள்ளிட்ட திமுக சார்பு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதனால், அந்த 13 மாவட்டங்களை கவனித்த பொறுப்பு அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் கிலியில் உள்ளனர். அதே நேரத்தில் எந்தெந்த முக்கிய நிர்வாகிகள் இந்த தேர்தலில் சரியாக பணியாற்றவில்லை, உள்ளடி வேலைகளை பார்த்தவர்கள் யார் யார் ?, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், ஒப்புக்காக வேலை பார்த்தவர்கள் எல்லாம் யார் என்ற டீட்டெய்ல்ட் விவரங்களும் முதல்வர் ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

’கட்சி கட்டமைப்பிலும் மாற்றம் செய்ய மு.க.ஸ்டாலின் திட்டம்’

அதனால், அமைச்சரவையில் மட்டுமில்லாது கட்சி நிர்வாகத்திலும் பெரிய மாற்றத்த்தை திமுக தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் உடனடியாக செய்ய முடிவு எடுத்திருக்கிறார். ஏனென்றால், அடுத்த 2 வருடங்களில் சட்டமன்ற தேர்தலை திமுக சந்திக்க வேண்டியிருக்கிறது. இப்போதே, இந்த ஓட்டைகளை அடைத்துவிட்டால், 2026 தேர்தலை மீண்டும் நம்பிக்கையோடு எதிர்க்கொள்ளலாம் என்பது அவரது கணக்காக இருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Omni Bus Accident: பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
7 AM Headlines: தமிழ்நாடு முழுவதும் மழை! பிரதமர் மோடிக்கு ராகுல் வைத்த செக் - இன்றைய ஹெட்லைன்ஸ்
7 AM Headlines: தமிழ்நாடு முழுவதும் மழை! பிரதமர் மோடிக்கு ராகுல் வைத்த செக் - இன்றைய ஹெட்லைன்ஸ்
Rasipalan: கடகத்துக்கு கவனம்! மிதுனத்துக்கு சுகம் - முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: கடகத்துக்கு கவனம்! மிதுனத்துக்கு சுகம் - முழு ராசிபலன்கள் இதோ
RR vs PBKS Match Highlights: கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்; ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி!
RR vs PBKS Match Highlights: கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்; ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Savukku Shankar appear Trichy court  : ”பெண் காவலர்கள் அடிச்சாங்க” சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுSavukku Shankar appear Trichy court : திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு..ஆஜர் படுத்திய பெண் போலீஸ்..GV Prakash Saindhavi Divorce : ”அத்துமீறி விமர்சிப்பதா?”கொந்தளித்த ஜிவி பிரகாஷ்! விவாகரத்து விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Omni Bus Accident: பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
7 AM Headlines: தமிழ்நாடு முழுவதும் மழை! பிரதமர் மோடிக்கு ராகுல் வைத்த செக் - இன்றைய ஹெட்லைன்ஸ்
7 AM Headlines: தமிழ்நாடு முழுவதும் மழை! பிரதமர் மோடிக்கு ராகுல் வைத்த செக் - இன்றைய ஹெட்லைன்ஸ்
Rasipalan: கடகத்துக்கு கவனம்! மிதுனத்துக்கு சுகம் - முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: கடகத்துக்கு கவனம்! மிதுனத்துக்கு சுகம் - முழு ராசிபலன்கள் இதோ
RR vs PBKS Match Highlights: கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்; ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி!
RR vs PBKS Match Highlights: கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்; ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
Athey Kangal: 1967இல் சீட் நுனியில் அமரவைத்த திகில் கிளாசிக்! ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த அதே கண்கள் படக்குழு!
Athey Kangal: 1967இல் சீட் நுனியில் அமரவைத்த திகில் கிளாசிக்! ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த அதே கண்கள் படக்குழு!
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Travel With ABP: புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5  பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5 பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
Embed widget