மேலும் அறிய

Actor Vijay Politics : விஜயின் திரைப்படங்களும் - குறியீடுகளும்... எம்.ஜி.ஆர் -ஐ பின்பற்றுகிறாரா நடிகர் விஜய்..?

தமிழ்நாட்டு நடிகர்களுக்கு அரசியல் ஆசானாக இருந்த எம்.ஜி. ராமசந்திரன் வழியில் ஆட்சி அமைக்க நினைத்த நடிகர்கள் ஏராளம். அந்த வரிசையில் நடிகர் விஜயின் எண்ணமும் இதுதானா ?

நடிகர் விஜயின் நடவடிக்கையானது கடந்த சில வருடங்களாகவே அவருக்கு அரசியல் ஆசை இருப்பதை மறைமுகமாய் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் படங்கள் நடித்தால் மட்டும்போதும், நாடாளுவதற்கு தகுதி  வந்துவிடும் என்று தமிழ்நாட்டில் உள்ளேயும் வெளியேயும் நம்பப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. இன்று தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களுக்கு இருக்கும் செல்வாக்கு கொஞ்சம் நஞ்சம் அல்ல. அந்த செல்வாக்கு அரசியல் வாக்காக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டால் அது சந்தேகம்தான். தமிழ்நாட்டில் உள்ள நடிகர்கள் தங்களுக்கு இருக்கும் புகழை வைத்து அரசியலில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கருதுகின்றனர் இதற்கு முன்னோடியாக இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 

எம்.ஜி.ஆர் அரசியல் வாழ்க்கை:

Actor Vijay Politics : விஜயின் திரைப்படங்களும் - குறியீடுகளும்... எம்.ஜி.ஆர் -ஐ பின்பற்றுகிறாரா நடிகர் விஜய்..?

எம்.ஜி.ஆர் சினிமாவில் உச்சம் தொட்ட பின்னரே அரசியலில் களம் கண்டு வென்றார் என பலரும் இன்றுவரை எண்ணுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல! எம்.ஜி.ஆர் தனது சிறு வயது முதல் அரசியல் மீது அதீத ஆர்வம் கொண்டவர். சிறுவயதில் காங்கிரஸ் கொள்கை மீது பற்று கொண்டு பின்னர் திராவிட கொள்கையை ஏற்று கொண்டார். இவர் ”சதிலீலாவதி” என்ற படத்தில்தான் கதாநாயகனாக அறிமுகமானார். அப்போது அவரின் வயது 22. பின்னர் 1950களில் பின்புதான் எம்.ஜி.ஆர் சினிமாவில் பிரபலமானார். இந்த காலக்கட்டத்தில் கலைஞர் உடன் நட்பு ஏற்பட்டு, பின்னர் 1953ல் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கிட்டதட்ட 20 வருடங்கள் அரசியலிலும், திறைத்துறையிலும் அயராது உழைத்தார். அதன் பின்னரே அ.தி.மு.க என்ற கட்சியை தொடங்கி அரசியலில் வென்றார்.

மற்ற நடிகர்களிள் அரசியல் வாழ்க்கை: 

திரைத்துறையில் உச்சகட்ட புகழில் இருக்கும் போது பல நடிகர்கள் அரசியலில் இறங்கி அடியோடு சரிந்ததே வரலாறு. நடிகர் திலகம் சிவாஜி தனது 33 வயதில் காங்கிரஸில் இணைந்தார். பின்னர் தனியாக ’தமிழக முன்னேற்ற கழகம்’ என்ற கட்சியை தொடங்கி அனைத்து தொகுதிகளில் போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்தார். அவரை தொடர்ந்து பாக்யராஜ், டி.ராஜேந்தர், ராமராஜன், சரத்குமார், விஜயகாந்த் அனைவருமே சினிமா வாழ்க்கையில் வெற்றி பெற்றாலும் அரசியலில் தோல்வி அடைந்தனர்.

நடிகர் விஜயின் அரசியல் வாழ்க்கை ?

Actor Vijay Politics : விஜயின் திரைப்படங்களும் - குறியீடுகளும்... எம்.ஜி.ஆர் -ஐ பின்பற்றுகிறாரா நடிகர் விஜய்..?

கடந்த சில நாட்களாக விஜய் அரசியல் வருகை குறித்தான பேச்சு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. நடிகர் விஜய் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே அவரது திரைப்படம் மற்றும் பாடல்களில் அரசியல் குறியிடை வைத்தவர். பின்னர் அதுவே அவருக்கு பெரிய சர்ச்சையாக மாறிய வரலாறும் உண்டு. ’தலைவா’ படத்தில் ’டைம் டு லீட்’ என்ற வாசகத்திற்க்காக படம் ரீலிஸ் ஆகுவதை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலதாமதம் செய்தார் என்று கூறப்பட்டது. அடுத்தடுத்து வந்த விஜய் படங்களில் அரசியலில் குறியீடு இன்னும் வெளிப்படையாக இருந்தது. மாநில அரசை தொடர்ந்து மத்திய சர்காரும் இவரை விட்டு வைத்ததில்லை. மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து பேசியதற்காக வருமாவரித் துறை அவரை படப்பிடிப்பில் இருந்து கட்டாயப்படுத்தி கூட்டி சென்றது விஜய் ரசிகர்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுதியது.
 
விஜயின் அரசியல் ஈடுபாடு:

Actor Vijay Politics : விஜயின் திரைப்படங்களும் - குறியீடுகளும்... எம்.ஜி.ஆர் -ஐ பின்பற்றுகிறாரா நடிகர் விஜய்..?

நடிகர் விஜய் தொடக்கத்தில் இருந்தே தனது விஜய் மக்கள் நிர்வாகிகளை வழிநடத்தும் விதம் மற்றும் பொதுமக்களுக்கு அவ்வப்போது இலவசங்கள் கொடுப்பதுமாக இருந்தார். கடந்த சில நாட்கள் முன்னர் உலக பட்டி தினத்தை முன்னிட்டு 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு வேலை உணவு அளித்தார். அதைதொடர்ந்து 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு தானே முன்நின்று பரிசுகளை வழங்கினார். தற்போது ’தளபதி விஜய் பயிலகம்’ என்ற இரவு நேர பாடசாலையை திறந்துள்ளார். இப்படி அடுத்தடுத்த நகர்வுகள் அரசியலில் இறங்குவதற்கான வழியையே பின்பற்றுகிறார் என்ற எண்ணம் தோன்றுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரை ரகசியமாக சந்தித்த ஈபிஎஸ், தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரை ரகசியமாக சந்தித்த ஈபிஎஸ், தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP executive cheating: இளம்பெண்களுக்கு மிரட்டல்! சிக்கிய ஆபாச வீடியோக்கள்! பாஜக நிர்வாகி கைதுTirupattur: நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல்.. பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ! கள்ளக்காதலன் பகீர்!VJ Siddhu Vlogs: ”அடி.. உதை.. ஆவேசம்” சர்ச்சையில் சிக்கிய VJ சித்து! வெளியான அதிர்ச்சி வீடியோ!செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரை ரகசியமாக சந்தித்த ஈபிஎஸ், தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரை ரகசியமாக சந்தித்த ஈபிஎஸ், தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
Thaipusam 2025 Wishes: முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
CSE 2025: ஐஏஎஸ் ஆக வேண்டுமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- எப்போது வரை?
CSE 2025: ஐஏஎஸ் ஆக வேண்டுமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- எப்போது வரை?
Embed widget