மேலும் அறிய

செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டாஸ்மாக் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய போலீசார் திட்டமிட்ட நிலையில், நேற்று உயர்நீதிமன்றம் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. இன்று உச்சநீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

திமுக மாஜிக்களுக்கு குறி

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.  அந்த வகையில் திமுக மாஜி அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, எ.வ.வேலு, சிவசங்கர், தாமோ அன்பரசன் என அடுத்தடுத்து சிக்கி வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய போலீசார் குறிவைத்தனர். தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழங்கில் கைது செய்ய திட்டமிட்ட நிலையில், நீதிமன்றம் ஜாமின் வழங்கியதால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்தார். 

டாஸ்மாக் முறைகேடு- செந்தில் பாலாஜிக்கு செக்

இந்த நிலையில் அடுத்த வழக்காக திமுக ஆட்சியில், டாஸ்மாக் மதுபான கொள்முதல், பார்களுக்கான டெண்டர் விட்டதில் முறைகேடு, சட்டவிரோதமாக பார் நடத்தியது, டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் பல கோடி ரூபாய் ஊழல் செய்த்தாக லஞ்ச ஒழிப்பு துறை செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலரின் வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் சோதனை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அளித்த நிலையில்,

முன் ஜாமின் மனு தள்ளுபடி

அப்போது போலீசார் செந்தில் பாலாஜியை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில் முறைகேடு நடைபெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதால் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார். 

இதனையடுத்து  எந்த நேரமும் செந்தில் பாலாஜி கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது. இதனையடுத்து செந்தில் பாலாஜி தலைமறைவானர். அதே நேரம் உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில்,  இன்று விசாரணையின் போது ஆஜரான செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், 'ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாக பழைய வழக்கை மீண்டும் கையில் தவெக அரசு கையில் எடுத்துள்ளதாக வாதிடப்பட்டது. எனவே செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார் எனவும் உறுதியளிக்கப்பட்டது. எனவே செந்தில் பாலாஜியை  கைதுசெய்யக் கூடாது எனவும் முன் ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர்,  'டாஸ்மாக் வழக்கில் 100 கோடி ஊழல் செய்ததற்கான முகாந்திரம் உள்ளதாக குறிப்பிட்டவர், எனவே செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான தேவை உள்ளதாக என வாதிட்டார். இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உறுதி அளித்துள்ளார். எனவே இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும் கைது செய்ய தடை விதித்த அவர், செந்தில் பாலாஜி பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சாடசிகளை கலைக்க கூடாது என கூறிய நீதிபதிகள் நிபந்தனைகளை மீறினால் முன்ஜாமின் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget