மேலும் அறிய

மக்கள் நீதிமய்யம் ஆட்சிக்கு வந்தால் மருத்துவ படிப்புக்கு SEET தேர்வு -கமல்ஹாசன்

மக்கள் நீதிமய்யம் ஆட்சிக்கு வந்தால் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து மருத்துவ படிப்பிற்கு சீட் (SEET) தேர்வு நடத்தப்படும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்,

சட்டசபை தேர்தலில் முதன்முறையாக போட்டியிடும் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யத்தின் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் மக்கள் நீதிமய்யத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

2 கோடி வேலை

இதன்படி, வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டை உருவாக்க ஊழலற்ற, நேர்மையான, விரைந்து செயல்படும் மக்கள் நலம் காக்கும் மக்களாட்சி அமைப்போம். விவசாயம், தொழில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை வளர்ச்சியை உயர்த்தி தமிழகத்தின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டுகளில் 15 முதல் 20 சதவீத வளர்ச்சியை உற்பத்தி செய்து ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்துவோம். 
1 முதல் 2 கோடி நபர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பை உறுதி செய்து,  தனிநபர் வருமானத்தை ரூபாய் 7 முதல் 10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம். நீலப்புரட்சி மூலம் நதிநீர் இணைப்பு, அதிதிறன் நீர்வழிச்சாலை, நீர்நிலை மேம்பாடு, அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்.

மக்கள் நீதிமய்யம் ஆட்சிக்கு வந்தால் மருத்துவ படிப்புக்கு SEET தேர்வு -கமல்ஹாசன்

அப்துல்கலாம் புரா திட்டம்

விவசாயம்-இயற்கையும், அறிவியலும் சார்ந்த நிரந்தர பசுமைப்புரட்சி ஏற்படுத்தப்படும். விவசாய பொருள்கள் விலை நிர்ணய உரிமை, உற்பத்தி முதல் ஏற்றுமதி வரை உலக சந்தைமயமாக்கல், காடு வனம் அடர்த்தியாக வளர்க்கப்படும். 
மீனவர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு உறுதி, ஆழ்கடல் மீன்பிடிப்பு பொருளாதார வளர்ச்சி, கிராமப்புற சுயசார்பிற்கும், தொழிலுக்கும், விவசாயத்திற்கும் மதிப்புகூட்டுதல், ஏற்றுமதிக்கும், வாழ்வாதாரத்திற்கும் மற்றும் மறுமலர்ச்சிக்கும் ஸ்மார்ட் கிராமம் உருவாக்கத்திற்கும் - அப்துல்கலாம் புரா திட்டம்.

பாடத்திட்டத்தில் சீர்திருத்தம்

அரசு பள்ளிக்கல்வி உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும். அடிப்படை கல்வி சீர்திருத்தம் செய்யப்படும். பயிற்றுவிக்கும் முறை, பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும். மேல்நிலை கல்வி 9 முதல் 10 வரை சீர்திருத்தம் செய்யப்படும். மாணவர்களின் படிப்பு சுமை குறைக்கப்படும். 1.3 கோடி நபர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த தனித்திறன் மேம்பாடு மற்றும் மதிப்புகூட்டப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கப்படும். உயர்கல்வி - உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி கல்வியாக மாற்றப்படும். உலகத்தோடு போட்டி போடும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 

சீட் தேர்வு

தமிழ்நாட்டு மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பாடத்திட்டத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு சீட்(SEET) தேர்வு நடத்தப்படும். அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம், மருத்துவ வசதி, தரமான அரசு மருத்துவ கல்வி, உயர்கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்படும். அனைத்து தொழிலாளர் நல வாரியங்கள், நல மேம்பாட்டு வாரியங்களாக மாற்றியமைத்து அவர்களுக்கு சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாடு உறுதி செய்யப்படும். சுற்றுப்புற சூழலுக்கேற்ப தொழில்துறை மேம்பாடு, மாசுபடுத்தும் 165 ஆலைகள் முற்றிலும் மாசில்லா ஆலைகளாக மாற்ற உறுதி செய்யப்படும். நஷ்டத்தில் இயங்கும் அனைத்து அரசு நிறுவனங்களும் லாபத்தில் இயங்க அறிவார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும். 

ஈழத்தமிழருக்கு குடியுரிமை

கிராமப்புற நகர்ப்புற கட்டமைப்பு, தொழிற்சாலை எரிசக்தி, விவசாய சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலை கட்டமைப்பு உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும். தமிழ்மொழி, கல்வி மொழி, ஆட்சி மொழி, ஆராய்ச்சி மொழி, ஒரு வருடத்தில் ஆங்கில மொழி புலமை, மற்ற மொழி பயில, தேர்வு எழுத வசதிவாய்ப்பு ஏற்படுத்தப்படும். ஜாதி, மத வேறுபாடில்லா மக்களாட்சி அமைப்போம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, மதத்தின் பெயரால் குடியுரிமை மறுப்பை முற்றிலும் எதிர்ப்போம். ஈழத்தமிழ் அகதிகளாக வந்தோருக்கு குடியுரிமை வலியுறுத்துவோம். 
மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் அரசியல் மற்றும் சட்டவழி முறைகளை பின்பற்றி அதை நனவாக்கும். கூட்டணி அரசை மத்தியில் உருவாக்குவோம். தமிழ்நாட்டை வளர்ந்த நாடுகளுக்கு இணையான நாடாக்குவோம்.  
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget