ரயில்வே கவுண்டரில் வாங்கப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்வது முன்பை விட தற்போது ரொம்ப எளிதாகிவிட்டது
Image Source: ABP Live
போன் கால் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் டிக்கெட்டை ரத்து செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.?
Image Source: ABP Live
இப்போது கவுண்டர் டிக்கெட்டை ரயில் நிலையத்திற்கு செல்லாமலேயே ரத்து செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Image Source: ABP Live
ரயில்வேயின் அதிகாரப்பூர்வ எண்ணான 139 என்ற எண்ணிற்கு போன் கால் அல்லது எஸ்எம்எஸ் மூலம் டிக்கெட் ரத்து செய்வதற்கான கோரிக்கை பதிவு செய்யப்படலாம்
Image Source: ABP Live
டிக்கெட்டை ரத்து செய்ய PNR எண் மற்றும் டிக்கெட் விவரங்களை வழங்க வேண்டும்
Image Source: ABP Live
உங்கள் மொபைலுக்கு வரும் ரத்து செய்வதற்கான உறுதிப்படுத்தல் செய்தியைப் படித்துவிட்டு, YES என டைப் செய்து 139-க்கு மீண்டும் அனுப்பவும்
Image Source: ABP Live
ரயில் புறப்படும் நேரத்திற்கு முன் ரத்து கோரிக்கையை பதிவு செய்ய வேண்டும்.
Image Source: ABP Live
போன் கால் அல்லது எஸ்எம்எஸ் மூலம் ரத்து செய்யப்பட்ட பிறகு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் டிக்கெட் மற்றும் அடையாள அட்டையுடன் நிலையத்திற்குச் சென்று பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
Image Source: ABP Live
ரயில்வே விதிகளின்படி டிக்கெட்டை ரத்து செய்யும்போது நிர்ணயிக்கப்பட்ட ரத்து கட்டணம் கழிக்கப்படலாம். பணத்தைத் திரும்பப் பெற ரயில்வே நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் டிக்கெட்டை கவுண்டரில் சமர்ப்பிப்பது அவசியம்
Image Source: ABP Live
இந்த வசதியால் மீண்டும் மீண்டும் ரயில் நிலையத்திற்கு செல்வதும் நீண்ட வரிசையில் நிற்பதும் என்ற சிரமம் வெகுவாக குறைகிறது