மேலும் அறிய

சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றம்

புதுவையின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை குறைந்தபட்சம் 10 நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி கூச்சலிட்டனர்.

புதுச்சேரி: மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க கூட்டத்தை கூடுதல் நாட்கள் நடத்தக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து திமுக, காங்கிரஸ், சுயேட்சை எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி சட்டப் பேரவை கூட்டம் 

புதுவை சட்டப் பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக பேரவைத்தலைவர் செல்வம் இரங்கல் குறிப்புகளை வாசித்து, பேரவை முன்பு முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்யவேண்டிய ஏடுகளை சமர்பிக்கும்படி கோரினார்.

அப்போது சுயேட்சை எம்எல்ஏ நேரு குறுக்கிட்டு, சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் எனது தொகுதியில் 6க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . அதுபற்றி விவாதிக்க வேண்டும். இதற்காக சபையை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையை குறைந்தபட்சம் 10 நாட்கள் நடத்த வேண்டும்

அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்களும் ஒட்டுமொத்தமாக எழுந்து, புதுவையின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை குறைந்தபட்சம் 10 நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி கூச்சலிட்டனர்.

அப்போது பேரவைத்தலைவர் செல்வம், முதல்வருடன் கலந்து பேசி பேரவையை நடத்துவது குறித்து தெரிவிக்கப்படும். தற்போது இருக்கையில் அமருங்கள் என கூறினார். ஆனாலும் தொடர்ந்து திமுக, காங்கிரஸ், சுயேச்சை எம்எல்ஏக்கள் பேசினர். அப்போது சுயேச்சை எம்எல்ஏ நேரு மற்றும் இதர எம்எல்ஏக்கள் மைக்குகள் அணைக்கப்பட்டன.

தர்ணாவில் ஈடுபட்ட எதிர்கட்சிகள்

தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மட்டும் பேசினார். இந்த நேரத்தில் சுயேச்சை எம்எல்ஏ நேரு, தனது இருக்கையிலிருந்து வெளியேறி, முதல்வர் ரங்கசாமியிடம் சென்று ஒரு மனு அளித்தார். பின்னர் பேரவைத்தலைவர் இருக்கை முன்பு நின்று வாக்குவாதம் செய்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பேரவைத்தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர்.

இதனால் சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் சட்டப்பேரவையை நடத்த இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து பேரவைத்தலைவர் செல்வம், தர்ணா செய்யும் உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக பேரவையிலிருந்து வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றம் 

இதையடுத்து சபை காவலர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சிவாவை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது எதிர்கட்சித் தலைவரும், திமுக புதுவை மாநில அமைபளருமான சிவா, அராஜகம் ஒழிக, ஜனநாயக படுகொலை என கோஷமிட்டார். அதைத்தொடர்ந்து , திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாக தியகராஜன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், சுயேச்சை எம்எல்ஏ நேரு ஆகியோரையும் சபையிலிருந்து வெளியேற்றினர்.

தொடர்ந்து வெளியேற்றப்பட்ட எம்எல்ஏக்கள் மைய மண்டப நுழைவுவாயில் அருகே தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதனிடையே சபை நடவடிக்கைகள் தொடர்ந்தது. இந்த சட்டபேரவை நிகழ்வுகல் 45 நிமிடங்களில் நிறைவடைந்தது. அதன்பிறகு எம்எல்ஏக்களும் போராட்டத்தை முடித்து கொண்டு புறப்பட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Embed widget