Honda Activa ev ஸ்கூட்டரின் நன்மைகள், ஏன் வாங்க வேண்டும்.? 10 முக்கிய அம்சங்கள் இதோ..

Published by: கு. அஜ்மல்கான்

இந்தியாவில் பல தசாப்தங்களாக நம்பிக்கைக்கு மறுபெயராக விளங்கும் Honda Activa பிராண்டிலிருந்து வந்த ஸ்கூட்டர் இது

இதில் 2 மொபைல் போர்ட்டபிள் லித்தியம் அயன் பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன ஹோண்டா ஸ்வாப்பிங் ஸ்டேஷனில் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளுடன் மாற்றிக்கொள்ளலாம்

இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 102 கிலோமீட்டர் தூரம் செல்லும் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோமீட்டர்

இதில் 6 கிலோவாட் திறன் கொண்ட சக்திவாய்ந்த பிஎம்எஸ்எம் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது வெறும் 73 வினாடிகளில் 0 முதல் 60 கிமீ வேகத்தை எட்ட முடியும்

ரைடரின் தேவைகளுக்கு ஏற்ப மூன்று ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன அதுமட்டுமின்றி பார்க்கிங்கில் இருந்து பின்னோக்கி எடுக்க ரிவர்ஸ் மோட் வசதியும் உள்ளது

டாப் வேரியன்ட்களில் ப்ளூடூத் இணைப்பு டர்ன் பை டர்ன் நேவிகேஷன் கால் மெசேஜ் அலெர்ட்களைக் காண்பிக்கும் வகையில் பெரிய 7 இன்ச் டிஎஃப்டி திரை பொருத்தப்பட்டுள்ளது

சாவியே இல்லாமல் ஸ்டார்ட் செய்வது லாக் செய்வது தூரத்தில் இருக்கும்போது கார்களைப் போலவே ஸ்மார்ட் கீ தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளனர்

பாதுகாப்புக்காக ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் முன் டிஸ்க் பிரேக் எல்இடி லைட்டிங் சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட்ஆஃப் போன்ற அம்சங்கள்

முன்புற டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புற 3 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் மூலம் குண்டும் குழியுமான சாலைகளில் மென்மையான பயணம்