மேலும் அறிய

வேலையை ஆரம்பித்த ராமதாஸ்? ''திலகபாமா ஓர் அரைவேக்காடு, நோய்க்கிருமி''- பாமக பொதுச்செயலாளர் அறிக்கை! 

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய விவகாரத்தில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஜனநாயகப் படுகொலை செய்துவிட்டார் என்று பாமக பொருளாளர் திலகபாமா விமர்சித்து இருந்ததை, பா.ம.க. பொதுச் செயலாளர்  வடிவேல் இராவணன் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’பாட்டாளி மக்கள் கட்சியின் அண்மை நிகழ்வுகள் பற்றிக் கட்சியின் பொருளாளராக இருக்கும் திலகபாமா என்பார் கூறுகையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எல்லா நிலைகளிலும் சரியான முடிவெடுத்துச் சரியான செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவார். இப்போது தவறான முடிவெடுத்து இருக்கிறார். இது ஒரு ஜனநாயகப் படுகொலை என்று சிறிதும் பொருளற்ற முறையில் சிறுபிள்ளைத் தனமாக ராமதாஸ் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர். பா.ம.க.வின் கொள்கை கோட்பாடுகள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி மேற்கொண்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளாதவர்.  

உடனிருந்தே கொள்ளும் நோய்

திலகபாமா பாட்டாளி மக்களின் தோழர் அல்லர். மேட்டுக் குடியினம். பெண்களுக்குத் தலைமையில், அதுவும் பொருளாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று ராமதாஸின் பரிந்துரையிலும், ஆதரவிலும் பதவி பெற்றவர். பல மாவட்டங்களில் பல ஆண்டுகளாக பாடுபட்டு வந்த பாட்டாளி சொந்தங்களை விரட்டி அடித்தவர்.  உடனிருந்தே கொள்ளும் நோய் இவர்.

கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி

அரசியல் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு இவர். பாட்டாளிகளின் உயிரியக்கமான பா.ம.க.வை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி.

தமிழகத்திலேயே ஏன், இந்தியாவிலேயே ஜனநாயகப் பண்புள்ள ஒரே கட்சி பா.ம.க. ஜனநாயக மரபுகளையும், சமூக நீதிக் கோட்பாட்டினையும் கட்சிக்குள்ளே பேணிக் காத்து வரும் ஒரே தலைவர் ராமதாஸ். அரசியல் கட்சிகள் கடந்து அனைவராலும் பாராட்டப்பெறும் ஒரே தலைவர். அவர் விடுக்கும் அறிக்கைகளே அனைவருக்கும் அரசியல் அகரமுதலி.

ராமதாஸை ஜனநாயகப் படுகொலை செய்தவர் என்று நெஞ்சிலே வஞ்சக எண்ணத்தோடு சொற்களை அள்ளி வீசிய திலகபாமாவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன். பல்வேறு மாநில பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றி வந்த நான் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறேன்.

நேற்று முளைத்த காளான்கள் வசை பாடுவதா?

நெஞ்சிலே கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி ராமதாஸை வசை பாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறி விடுவதுதான் அவருக்கு நல்லது. திமுக தலைவர் கலைஞர் போன்றவர்களே தைலாபுரத்திலிருந்து எப்போது தைலம் வரும் என்று காத்திருக்கையில், நேற்று முளைத்த காளான்கள் அவரை வசை பாடுவதுதான் பேரவலம்.

மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசுகள் எதுவாயினும், கூட்டணி கட்சியே என்றாலும் ஆட்சியாளரின் தவறான போக்குகளையும்,  ஆட்சியின் குறைபாடுகளையும் ஏமரா மன்னனை இடித்துரைக்கும் சான்றோனாக விளங்கிவரும் ராமதாஸை, நேற்றுக் கட்சிக்குள் வந்த திலகபாமா வசைபாடி மகிழ்வதை விடுத்து,  தான் கூறியவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.  அப்படியே கட்சியிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்’’.

இவ்வாறு பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் சாடியுள்ளார்.

(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
TVK: ஆட்டம் காணும் அதிமுக! தவெக-விற்கு தாவும் முன்னாள் அமைச்சர்கள் - இதான் லிஸ்ட்
TVK: ஆட்டம் காணும் அதிமுக! தவெக-விற்கு தாவும் முன்னாள் அமைச்சர்கள் - இதான் லிஸ்ட்

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget