மேலும் அறிய

"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!

அடுத்த ஐந்தாண்டுகளில் பிரதமர்களாக ஐந்து பேர் பதவி வகிப்பது குறித்து இந்தியா கூட்டணி பேசி வருகிறது என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி கடுமைாக முயற்சித்து வருகிறது.

இறுதிகட்டத்தை நோக்கி மக்களவை தேர்தல்: ஆனால், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதவரை 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது. 420க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் நடந்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில், நாளை மறுநாள் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. கடந்த இரண்டு மக்களவை தேர்தல்களிலும் பாஜக அங்கு மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக, 2019 மக்களவை தேர்தலில் 10 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி இருந்தது.

கடந்த 2 தேர்தல்களை போல் இந்த முறையும் மாபெரும் வெற்றியை பெற பாஜக தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், மகேந்திரகர் நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, "அடுத்த ஐந்தாண்டுகளில் பிரதமர்களாக ஐந்து பேர் பதவி வகிப்பது குறித்து இந்தியா கூட்டணி பேசி வருகிறது" என்றார்.

இந்தியா கூட்டணி மீது கடும் தாக்கு: இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "மாடு இன்னும் பாலே தரவில்லை. ஆனால், இந்தியா கூட்டணி தலைவர்கள் நெய்க்காக சண்டையிட்டு வருகின்றனர். நான் உயிருடன் இருக்கும் வரை தலித்கள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது.

நீங்கள் நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தையும் நீங்கள்தான் தீர்மானிக்க போகிறீர்கள். ஒருபுறம் நீங்கள் முயற்சி செய்து சோதித்து பார்த்த சேவகனாக நான் இருக்கிறேன். மறுபக்கம் யாரென்று தெரியவில்லை" என்றார்.

ஹரியானாவில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக ஹரியானா மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2014 மற்றும் 2019இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.

ஹரியானா அரசியல் சூழல்: கடந்த 2014ஆம் ஆண்டு, தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்த நிலையில், 2019ஆம் ஆண்டு அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக, 10 தொகுதிகளில் வென்ற ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.

ஏற்கனவே முதலமைச்சராக பதவி வகித்து வந்த மனோகர் லால் கட்டார் முதலமைச்சராகவும் ஜனநாயக ஜனதா கட்சியின் நிறுவனர் துஷ்யந்த் சவுதலா துணை முதலமைச்சராக பொறுப்பேற்றனர். அங்கு, நான்கரை ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது.

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் இரண்டு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முறிந்தது. இதனால், பாஜக அரசுக்கான தனது ஆதரவை ஜனநாயக ஜனதா கட்சி திருமப்பெற்றார். இதையடுத்து, மனோகர் லால் கட்டார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

புதிய முதலமைச்சராக பாஜகவின் நைப் சிங் சைனி பதவியேற்றார். ஹரியானா அரசியலில் தொடர் பதற்றம் நிலவி வந்த நிலையில், பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேட்சைகளும் திரும்ப பெற்றனர். இதனால், 90 இடங்கள் கொண்ட ஹரியானா சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 40ஆக குறைந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Embed widget