மேலும் அறிய

நாடாளுமன்ற தேர்தல் இரண்டாவது விடுதலைப் போராட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின்

மத இன மொழி சாதி அடிப்படையில் பிரித்து தமிழ்நாட்டினை வஞ்சித் அரசாக பாஜக உள்ளது - முதல்வர் ஸ்டாலின்

விழுப்புரம் : நாடாளுமன்ற தேர்தல் இரண்டாவது விடுதலை போராட்டம் என்றும் நாடு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி உள்ளதாகவும், இந்தியா முன்னேற்ற பாதையிலும்  வளர்ச்சி பாதையில் செல்வதற்கான தேர்தல் அறிக்கையாக  காங்கிரஸ் வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் 

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்னுபிரசாந்த் ஆகிய இரு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, எம் ஆர்கே பன்னீர்செல்வம், ஏ வ வேலு, செஞ்சி மஸ்தான், சிவி கணேசன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட திரளான திமுக கூட்டணி தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆளுநருக்கு மாநில உரிமைகள் குறித்து பாடம்

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மேடை பேச்சு இந்தியா கூட்டணியின் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்ற ஆதரவு கேட்க வந்துள்ளதாகவும் கடலூரில் முத்து நகரில் 100 கோடி மதிப்பீல் புனரமைப்பு பணி கடந்த மூன்று வருடங்களாக செய்து தொடர்ந்து செய்து வருவதால் மக்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளதாகவும், ஆளுநருக்கு மாநில உரிமைகள் குறித்து பாடம் எடுக்கும் பேராசிரியராக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி உள்ளதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய ஸ்டாலின் திருமாவளவன் ஆதரவு பெற்ற வேட்பாளர் ரவிக்குமார், எழுத்தாளர் , பத்திரிக்கையாளர், களப்போராளி, பன்முக திறமை கொண்ட வேட்பாளராக சிறப்பாக செயல்படுகிற அவருக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுவதாகவும், கடலூரில் போட்டியிடும் விஷ்னு பிரசாந்த்துற்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுவதாகவும் தமிழ்நாட்டின் குரலாக ஒளிக்க அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென் கூறினார்.

இரண்டாவது விடுதலை போராட்டம்

நாடாளுமன்ற தேர்தல் இரண்டாவது விடுதலை போராட்டம் நாடு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி உள்ளதாகவும், பட்டியலின பழங்குடியினருக்கு ஆபத்து வந்துள்ளதாகவும் நாட்டினை நிர்வகிக்கும் செயலாளர்களில் மூன்று சதவிகிதம் கூட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இல்லை என்றும் கடந்த இரண்டு மூன்று தலைமுறைகளாக படித்து முன்னேறி வருவதாகவும் இதற்கு போராடி பெற்ற சமூக நீதி தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

சமூக நீதி

சமூக நீதி முழுமையாக கிடைக்காததற்கு காரணம் பாஜக என்பதால் அவர்கள் மீண்டும்  ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறை இருக்காது சமூக நீதியை சவக்குழு தோண்டி புதைத்து விடுவார்கள் என்பதால் தான் பாஜகவை எதிர்ப்பதாகவும் சமூக நீதிக்கான ஆட்சியை திரவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நடத்தி வருவதாகவும், பிற்படுத்தப்பட்டோர் விழுக்காட்டிற்காக சட்டநாதன் அமைச்சகத்தை கொண்டு வந்தவர் கலைஞர் என கூறினார். தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடி விழுக்காடு இருக்க காரணம் கருணாநிதி என்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கே சமூக நீதி வழிகாட்டியவர்  கருணாநிதி  என்பதால் சமூக நீதிக்காக கூட்டணி அமைத்து இந்தியா முழுவதும் பேச வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சாதி வாரியாக நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படுமென்று எஸ் சி எஸ் டி உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தபடும் என்று  குறிப்பிட்டுள்ளது மட்டுமல்லாமல் இந்தியா முன்னேற்ற பாதையிலும்  வளர்ச்சி பாதையில் செல்வதற்கான தேர்தல் அறிக்கையாக  காங்கிரஸ் வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.

சந்தர்ப்பவாத கூட்டணி

சமூக நீதியை நிலைநாட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதாகவும், மத இன மொழி சாதி அடிப்படையில் பிரித்து தமிழ்நாட்டினை வஞ்சித் அரசாக பாஜக உள்ளது என்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜகவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளதாகவும், பாஜகவிற்கு மதிப்பெண் எவ்வளவு கொடுப்பீர்கள் என ராமதாசிடம் கேட்டபோது பூஜ்யத்திற்கு கீழே கொடுப்பேன் என ராமதாஸ் தெரிவித்தார் ஆனால் அவருடன் ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார் யாமரிய பராபரனே என்று சந்தர்ப்ப வாத கூட்டணியை ராமதாஸ் வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

தேர்தல் வாக்குறுதிகள் 

சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம் ரத்து செய்யப்படும், விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கசாவடிகள் முற்றிலுமாக மூடப்படும் மாணவர்கள் கல்லி கடன் தள்ளுபடி செய்யப்படும் சாதி வாரி கணக்கெடுப்பு, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் பென்னாடம் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தபடும் திண்டிவனம் முதல் நகரி வரை ஆரணி காஞ்சிபுரம் ரயில் இணைப்பு பாதை அமைக்கப்படும் பழைய முந்திரி மரங்கள் அகற்றப்பட்டு புதிய மரக்கன்றுகள் நடுவதற்கு மான்யம்  வழங்கப்படும்.

தேஜஸ் ரயில் நிற்க நடவடிக்கை எடுக்கபடுமென திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை மத்தியில் இண்டியா கூட்டணி அமைந்த உடன் நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார். வன்னியர் சமுதாய மக்கள் 1987 ஆம் ஆண்டு தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடைபெற்றதை மறக்க மாட்டார்கள் அதிமுக அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றும் பார்த்து பார்த்து நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கனடா வரை முதலமைச்சரின் காலை உணவு திட்டம் சென்றிருப்பதாகவும்,

தாய்வீட்டு சீதனம் 

அரசு பள்ளிக்கு சென்றபோது மாணவனை அழைத்து சாப்பிட்டியா என கேட்டபோது அவன் இல்லை என்று கூறியதால் உடனடியாக அதிகாரிகளை அழைத்து எவ்வளவு நிதி நெருக்கடி இருந்தாலும் காலை உணவு வழங்க கையெழுத்திட்டதாகவும், புதுமைப்பெண் திட்டம், தோழியர் விடுதி, இலவச பேருந்து திட்டம் செயல்படுத்தி வருவதாகவும், கல்லூரி மாணவர்களு க்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாகவும் ஆயிரம் ரூபாய் கொடுப்பதை ஸ்டாலின் அண்னன் கொடுக்கும் தாய்வீட்டு சீதனமாக கருதுவதாக தெரிவித்தார்.

துரோகிகளை வீழ்த்த வேண்டும்

பாஜகவிற்கு வாக்களித்தால் மாநிலங்களில் உரிமையை பறித்து நகராட்சி போல் நடத்துவார்கள் என்றும் ஆளுநர்கள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் செயல்படாமல் ஆக்கி மத வெறியை தூண்டி விடுவார்கள் என்றும் எதிரிகளையும் துரோகிகளை வீழ்த்த வேண்டும் என்றும் பாஜக பாமக, அதிமுகவை மக்கள் தூக்கி எரிய வேண்டும் பாசீசத்தை வீழ்த்த கூடிய வாக்காக மக்கள் வாக்கு இருக்க வேண்டும் இந்தியாவை காக்க இண்டியா  கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
Embed widget