மேலும் அறிய

பழனி கோயில் நில மோசடி.! விஜய் அரசுக்கு ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ் -முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அதிமுக

Palani Temple admk protest : நடுநிலையுடன் வழக்கை நடத்த CBI வசம் ஒப்படைக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பழனி கோயில் நில முறைகேடு

பழனி கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் 2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறது. இந்த நிலையில் பழனி கோயில் நில முறைகேடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தூய சக்தி அரசு என்று சொல்லிக் கொள்பவர்களின் அறநிலையத் துறையின் பராமரிப்பில் இருந்த இந்த நிலம், தற்போது இரண்டு தனியாருக்கு கிரயம் செய்து கொடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த பத்திரப் பதிவை செய்வதற்காகவே பழனி சார் பதிவாளர் விடுமுறையில் அனுப்பப்பட்டு, கொடைக்கானலில் இருக்கும் சார் பதிவாளரை ஒருநாள் கூத்தாக பழனி அலுவலகத்திற்கு நியமித்துள்ளார்கள் என்று செய்திகள் வந்துள்ளன. 

CBCID விசாரணை- கண்துடைப்பு

அந்த அதிகாரி உயர்நீதிமன்ற வழக்கைப்பற்றியோ, நீதிபதிகளின் அறிவுறுத்தலையோ கருத்தில் கொள்ளாமல் மடத்திற்குச் சொந்தமான நிலத்தை, தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்ததன் மர்மம் விளங்கவில்லை.இந்த நில மோசடி விற்பனை குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து புகார்கள் எழுந்ததும், அதிகார வர்க்கம் தங்களை களங்கத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ள CBCID மூலம் ஒரு கண்துடைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. விசாரணை செல்லும் கோணத்தைப் பார்த்தால், மோசடி செய்தவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களையும், தூண்டியவர்களையும் காப்பாற்றும் நோக்கோடு அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட நிலத்தை பத்திரப் பதிவு செய்து கொடுத்த அதிகாரி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலத்தை விற்பதற்கான பத்திரம் தயாரித்து, விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திட்ட நபர்கள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலத்தை ரூ.2 கோடிக்கு வாங்கிய இருவர் இன்னும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படவில்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களின் சொத்துக்களும் இதுபோல் பறிபோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடமை. இந்தக் கடமையில் எங்களுக்கு உறுதுணையாக அனைத்துத் தரப்பு மக்களும், ஆன்மீகவாதிகளும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பழனியில் போராட்டம் - இபிஎஸ் அறிவிப்பு

இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை காவல் துறையினர் தேடி வருவதாகவும் அரசு தரப்பிலேயே கூறப்படுகிறது. எனவே, பழனி, தண்டபாணி சுவாமிகள் மடம் நில விவகாரத்தில், இந்த அரசின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. இந்த கண்ணாமூச்சி விளையாட்டு நிறுத்தப்பட வேண்டுமென்றால், நடுநிலையான அமைப்பு ஒன்றின் சார்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்நிலையில், பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த த.வெ.க. அரசைக் கண்டித்தும்; இவ்வழக்கை உடனடியாக CBI வசம் ஒப்படைக்க பொய்க்கால் குதிரை த.வெ.க. அரசை வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 25.7.2026 சனிக் கிழமை காலை 9.30 மணியளவில், பழனியில் மயில் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Minister Keerthana:
Minister Keerthana: "பல இடங்களில் சிப்காட் பொட்டல்காடாகத்தான் உள்ளது.." திமுக-வை விளாசிய அமைச்சர் கீர்த்தனா
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget