மேலும் அறிய

OPS: "நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுக்குத்தான் எங்களது ஆதரவு" -ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

ஏற்கனவே டிடிவி தினகரனும் நாங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம் சின்னம்மா வருகையை ஒட்டி நாங்கள் காத்திருக்கிறோம்.

சேலத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது. "விஜயகாந்த் சிறந்த திரைப்பட நடிகர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்று சிறப்பாக பணியாற்றினார். அனைத்து மக்களிடமும் அன்பாக பழகக் கூடியவர், ஏழை, எளிய மக்கள் மீது அன்பும் பாசமும் கொண்டவர். தென் மாவட்டத்தில் இருந்து சென்னை வந்து தனது கடின உழைப்பால் உயர்ந்து, நடிப்பு துறையில் இடம் பெற்றவர். தேமுதிக அரசியல் கட்சியாக துவக்கி சட்டமன்ற வரலாற்றில், எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்து நின்றவர். இப்படி நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து அனைத்து நடிகர், நடிகைகள் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றவர்.

பல நிலைகளில் தனது கடின உழைப்பால் உயர்ந்து நிலைக்கு வந்தவர் அருமை சகோதரர் அண்ணன் விஜயகாந்த் மறைவு எங்களுடைய கழக உரிமை மீட்பு குழு சார்பாக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தேமுதிக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரேமலதாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா இறைவனுடைய திருவடி நிழலில் அமைதி கொள்ளவேண்டும் என்று இதய பூர்வமான அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்கத்தின் சார்பாக அனைவரும் ஒரு நிமிடம் அமைதியாக எழுந்து நின்று அஞ்சலி செலுத்துவோம் என்று அஞ்சலி செலுத்தினர்‌. விஜயகாந்த் உடைய மறைவிற்கு நேரடியாக அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்காக கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது மறைவிற்கு அஞ்சலி செலுத்த நேரடியாக செல்ல இருப்பதால் கூட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

OPS:

தொடர்ந்து பேசிய அவர், ”அதிமுக சொத்துக்கள் விற்பவர்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. அது எம்ஜிஆர் தொண்டர்களுக்காக சேமித்த சொத்து அதனைப் பாதுகாக்க வேண்டும் என்றார். கலைஞர் கருணாநிதி காலத்தில் போடப்பட்ட வழக்கு என் மீது உள்ளது. நீதிமன்றத்தில் என்னுடைய வாதங்களை எடுத்துரைக்க உள்ளேன். இதனால் எடப்பாடி பழனிசாமி மீது சொல்லப்பட்ட ரகசியம் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லுவோம். அதிமுகவில் மீண்டும் எடப்பாடியுடன் சேரமாட்டேன் என்று கூறினார். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்ஜிஆரை விளக்கியபோது ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே அவருடன் இருந்தார். முழுமையாக அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் கலைஞர் கருணாநிதி இறந்தார். அதனை மீறியும் மக்களின் ஆதரவோடு, தொண்டர்களின் சக்தியோடு எம்ஜிஆர் எழுந்து நின்றார். மக்களின் ஆதரவை பெறாமல் ஒன்பது தேர்தல் தொழில்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. கட்சியை படுகுழியில் தள்ளிவிட்டார்” என்றார். 

OPS:

தமிமுன் அன்சாரி எனது தொகுதி மக்களிடம் ஒரு பெட்டி வைத்து வாக்குச்சீட்டு மூலமாக யாருடன் கூட்டணி அமைப்பது என்று கூற உள்ளேன் என்றார். நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் அவர் பெட்டி ஒன்றை வைத்தார். அதனை பாதியில் அவர் எடுத்துச் சென்று விட்டார். அதில் 81 ஓட்டு எனக்கும் 59 ஓட்டுகள் பழனிச்சாமிக்கும் விழுந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உடன் கூட்டணி வைத்திருந்தோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுக்கு தான் எங்களது ஆதரவு. ஏற்கனவே டிடிவி தினகரனும் நாங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம் சின்னம்மா வருகையை ஒட்டி நாங்கள் காத்திருக்கிறோம்" என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
TVK Vs DMK: பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
Republic Day 2025: குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
HC Orders TN Govt.: பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN BJP LEADER : ’அண்ணாமலையை தூக்குங்க’’கண்டிசன் போட்ட EPS..நயினாருக்கு அடித்த JACKPOTVarunkumar vs Seeman : ”கொஞ்ச நஞ்ச பேச்சா..” சீமானை சீண்டும் வருண்குமார்? முற்றும் மோதல்!Vengaivayal Issue | Kabbadi Players: தமிழக வீராங்கனைகளுக்கு அடி தூக்கி வீசப்பட்ட Chair! எல்லைமீறிய வட இந்திய நடுவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
TVK Vs DMK: பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
Republic Day 2025: குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
HC Orders TN Govt.: பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
Embed widget