மேலும் அறிய

OPS: 'அதிமுக என்னிடம் இருக்கிறது.' - தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்! அடுத்தக்கட்ட நகர்வு!

இருதரப்புமே, அதிமுக நாங்கள்தான் எனக் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் இதன் முடிவு தேர்தல் ஆணையத்தின் கையில்தான் இருக்கிறது. அதற்கான வேலையை தற்போது ஓபிஎஸ் தொடங்கியுள்ளார்.

சென்னை வானகரத்தில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்-ஐ தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும்,  அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு, அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். அதேபோல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத்தலைமையும் ரத்து செய்யப்பட்டது. இது ஒருபுறம் நடக்க, பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே அதிமுக அலுவலகத்துச் சென்றார் ஓபிஎஸ். கல்வீச்சு, அடிதடி என இரு தரப்பு ஆதரவாளர்களும் சண்டையிட்டுக்கொண்ட நிலையில் அதிமுக அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டது.

ஒருபக்கம் ஈபிஎஸ்ஸுக்கு பதவி , ஓபிஎஸ்-ன் பதவி பறிப்பு என பொதுக்குழு நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் தான் வந்த வாகனத்தில் ஆவணங்கள் அனைத்தையும் அதிமுக அலுவலகத்தில் இருந்து ஏற்றினார் ஓபிஎஸ். இப்படி பல பரபரப்புகளை நேற்று முடிந்த நிலையில் இன்று அதிமுக யார் பக்கம் இருக்கிறது என்ற சந்தேகத்துடன் குழம்பியுள்ளனர் அதிமுக தொண்டர்கள். இருதரப்புமே, அதிமுக நாங்கள்தான் எனக் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் இதன் முடிவு தேர்தல் ஆணையத்தின் கையில்தான் இருக்கிறது. அதற்கான வேலையை தற்போது ஓபிஎஸ் தொடங்கியுள்ளார்.

OPS: 'அதிமுக என்னிடம் இருக்கிறது.' - தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்! அடுத்தக்கட்ட நகர்வு!

ஒருங்கிணைப்பாளர்களைத் தவிர வேறு யாரையும் அதிமுகவை உரிமை கொண்டாட அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்ற முறையில் அதிமுக தற்போதும் என்னிடம்தான் இருக்கிறது என ஓபிஎஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, இன்று காலை வங்கிக்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி, பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் இனி வரவு செலவு கணக்குகளை அவர் கவனிப்பார் என குறிப்பிட்டிருந்தார். 

முன்னதாக, ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவின் ஆவணங்களை அவருடைய ஆதரவாளர்கள் கொள்ளையடித்து சென்றதாகவும், இதற்கு வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ்பாண்டியன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கலவரத்தில் ஈடுபட்டதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குப்பதிவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான ஆயிரம் விளக்கு பகுதிசெயலாளரான பாலச்சந்திரன் ( வயது 34), திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் சீனிவாசன் ( வயது 40), 171வது வடக்கு வட்ட கழகச்செயலாளர் கார்டன் செந்தில் ( வயது 40) மயிலாப்பூர் பகுதி இணைச்செயலாளர் தினேஷ் ( வயது 36), 113வது வட்ட உறுப்பினர் மார்க்கெட் சுந்தர் ( வயது 33), சேப்பாக்கம் மாவட்ட பிரதிநிதி கார்த்திக் ( வயது 38), 120வது கிழக்கு வட்டதுணைச் செயலாளர் முரளிகிருஷ்ணன் (வயது 30), விருகம்பாக்கம் வடக்குபகுதி கழக பொருளாளர் விநாயகமூர்த்தி (வயது 46), விருகம்பாக்கம் 128வது வட்ட அவைத்தலைவர் செல்வம் (வயது 58), திருவல்லிக்கேணி இளைஏஞர் பாசறை துணைச்செயலாளர் லோகேஷ் (வயது 26) கோடம்பாக்கம் 112வது வட்ட மேலவை பிரதிநிதி பாபு, (வயது 62), 112வது வட்ட அவைத்தலைவர் குட்டி (வயது 48), 120வது மேற்கு வட்ட செயலாளர் வின்சென்ட் ராஜ் (வயது 38), 111வது வட்ட கழகச் செயலாளர் சால்னா சேகர் (வயது 52) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Embed widget