மேலும் அறிய

”மக்கள் வயிற்று எரிச்சல் எங்களுக்குத்தான்.. உங்களுக்கு இல்லை..” : அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் தா.மோ அன்பரசன்

அதிகாரிகள் வேலை செய்வதே இல்லை, ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் என எச்சரிக்கை..

பல ஊர்களில் பேருந்து வசதி இல்லாததால், பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் குழந்தைகள் அவதிப்பட்டு வருகிறார்கள், அதனால் மக்கள் வயிற்று எரிச்சல் பட்டு வருகிறார்கள், அரசு அதிகாரிகள் செய்யும் செயல் உங்கள் மேல் வராது, அவையெல்லாம் ஆட்சியாளர்களாகிய எங்கள் மீது தான் வரும், என கோரிக்கை  மனுக்கள் பெறும் கூட்டத்தில் அமைச்சர் தாமோ அன்பரசன் பேச்சு.
 
தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும்  உள்ள உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் கூட்டத்தை நடத்த வாரந்தோறும் நடந்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் நடைபெற்றது.

”மக்கள் வயிற்று எரிச்சல் எங்களுக்குத்தான்.. உங்களுக்கு இல்லை..” : அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் தா.மோ அன்பரசன்
 
கூட்டத்தில் குறு,சிறு  தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா,சாலை வசதி,குடிநீர் வசதி,மின் விளக்கு வசதி, பேருந்து வசதி, என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் கடந்த வாரம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட  நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்பொழுது அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்காததால் அமைச்சர் தாமோ. அன்பரசன், பொதுமக்கள், வழங்கும் மனுக்கள் மீது உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார், அதிகாரிகள் வேலை செய்வதே இல்லை, ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

”மக்கள் வயிற்று எரிச்சல் எங்களுக்குத்தான்.. உங்களுக்கு இல்லை..” : அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் தா.மோ அன்பரசன்
பல ஊர்களில் பேருந்து வசதி இல்லாததால், பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் குழந்தைகள் அவதிப்பட்டு வருகிறார்கள், அதனால் மக்கள் வயிற்று எரிச்சல் பட்டு வருகிறார்கள், அரசு அதிகாரிகள் செய்யும் செயல் உங்கள் மேல் வராது, அவையெல்லாம் ஆட்சியாளர்களாகிய எங்கள் மீது தான் வரும் என தெரிவித்தார். பொதுமக்கள் வழங்கிடும் மனுக்களை ஏதோ கடமைக்கு கொடுத்தார்கள் என்று நினைக்காமல், இந்த மனுக்களை நிதி இல்லை என்றால் எங்களிடம் அனுப்பி விடுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், மாவட்ட ஆட்சியர், அமைச்சர், நாங்கள் பதில் சொல்கிறோம், கீழே இருக்கின்ற சிறு சிறு பிரச்சனைகள் எல்லாம் அதிகாரிகளால் செய்யக்கூடிய வேலைகள் நிறைய இருக்கிறது அவற்றையெல்லாம் சரிசெய்து கொடுத்து இந்த ஆட்சிக்கு நல்ல பெயரை பெற்று தர வேண்டும் என அமைச்சர் தாமோ. அன்பரசன் கேட்டுக் கொண்டார்.

”மக்கள் வயிற்று எரிச்சல் எங்களுக்குத்தான்.. உங்களுக்கு இல்லை..” : அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் தா.மோ அன்பரசன்
இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, ஒன்றியக்குழு தலைவர்கள் மலர்க்கொடி குமார், தேவேந்திரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன் - மாநாட்டில் திருமா வேதனை !
உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன் - மாநாட்டில் திருமா வேதனை !
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget