மேலும் அறிய

Seeman supports KT raghavan: ‛உலகில் நடக்காததையா ராகவன் செய்துவிட்டார்...’ சீமான் பேட்டியால் பரபரப்பு!

‛‛ஒருவரின் அனுமதி , ஒப்புதல் இல்லாமல் படம் பிடிப்பது சமூக குற்றம், அநாகரிகம். படம்பிடித்தவரை கைது செய்திருக்க வேண்டும்’’ -சீமான்

சென்னை வளசரவாக்கம் சின்னப் போரூர் பகுதியில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடிலில் ' மாயோன் பெருவிழா' நிகழ்ச்சி நடைபெற்றது .

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அலுவலகத்தில்  வைக்கப்பட்டிருந்த மாயோன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: 

‛‛மாயோன் மேய காடுறை உலகு என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஆயர் குல தலைவனாக , இறைவனாக இருந்தவர் மாயோன். ஐநிலங்களாக பகுத்து வாழ்ந்த தமிழர்களின் மாயோன்   கண்ணன் , பெருமாள்,  கிருஷ்ணர் ஆகிவிட்டார். மால் என்றால் கருப்பு, மாயோன் என்பது கருமேகம் என்று பொருள். மாயோன் , திருமுருகப் பெருவிழாக்களுக்கு சுவரொட்டி ஒட்டுகிறோம். பிறந்தநாள்களை கொண்டாடும் வழக்கு தமிழர்களுக்கு இல்லை, அதனால்தான்  முன்னோர்களின் இறப்புக்கு மட்டுமே சுவரொட்டி ஒட்டுகிறோம். 

Seeman supports KT raghavan: ‛உலகில் நடக்காததையா ராகவன் செய்துவிட்டார்...’ சீமான் பேட்டியால் பரபரப்பு!

சிங்காரச் சென்னை சுவரொட்டியால் கெட்டுப்போகும் என்று சொல்லி சுவரொட்டியை தடுத்துவிட்டு, சுவரில் விளம்பரம் எழுதுகிறார்கள். நெகிழி பயன்பாட்டை தடுக்காமல் சிங்காரச் சென்னை எப்படி உருவாகும், இப்போது தாய்மார்கள் இடுப்பில் பிளாஸ்டிக் குடம்தான் இருக்கிறது.சென்னையில்  சாலைகள் சவக்குழி போல இருக்கிறது. ஒருவரின் அனுமதி , ஒப்புதல் இல்லாமல் படம் பிடிப்பது சமூக குற்றம், அநாகரிகம். படம்பிடித்தவரை கைது செய்திருக்க வேண்டும். உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார். சட்டசபைக்குள் ஆபாச படம் பார்ப்பது தவறு என்று சொல்லலாம். 
ஒருவர்  தனிப்பட்ட முறையில் அறையில் பேசுவதை படம் பிடிக்கிற அளவு  கேடுகெட்ட சமூகமாக மாறி விட்டது , ஒட்டு கேட்பது , பதிவு செய்து வெளியிடுவதால் என்ன சாதிக்க முடியும்.
ஒருவரின் அனுமதி இல்லாமல் ஆடியோ , வீடியோவை படம் பிடிப்பது தவறு. அதை ஏன் பார்க்க வேண்டும், அவரா பார்க்க சொன்னார்  ? 

நதியில் வெள்ளம் , கரையில் நெருப்பு நடுவினில் இறைவன் சிரிப்பு எனஙஓ.பன்னீர் செல்வம் தனது நிலையை சட்டமன்றத்தில் கவிதையாக கூறியுள்ளார். என் மக்கள் குடிசையில் படுத்தபோதேனும் உயிருக்கு உத்தரவாதம் இருந்தது. குடிசை மாற்று வாரியம் கட்டிய வீட்டில் அதுவும் இல்லை. சுவரை தொடுவதே தவறு போல் ஆகிவிட்டது.

மேம்பாலம் கட்டும்போதே இடிகிறது. 5லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் ஏற்பட காரணம் என்ன ?  இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பதை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றியுள்ளனர். பெயர் மாற்றம் மட்டும் போதாது.  இதேபோல்தான் சைவர் , மாலியத்தை பின்பற்றிய தமிழர்களை இந்துக்கள் என்றார்கள்.

இந்து சமய அறநிலையத்துறையை தமிழர் சமய அறநிலையத்துறை என பெயர் மாற்ற வேண்டும். திருப்பதி , ஐயப்பன் கோயில் மீட்க வேண்டும். 7 பேர் விடுதலை தொடர்பாக 30 ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தை மீண்டும் முதல் புள்ளியில் கொண்டுபோய் நிறுத்தி விட்டார்கள். ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதம் மூலம் போராட்டத்தை முதல் புள்ளிக்கு மீண்டும் கொண்டு சென்றுவிட்டார். வடிவேலு பாணியில் திரும்பவும் முதலில் இருந்தா என கூறும் விதமாக ஸ்டாலினின் நடவடிக்கை அமைந்து விட்டது. 

வடிவேலு மீண்டும் திரையுலகுக்கு வர வேண்டும் என்பதே எங்களது விருப்பம். சட்ட மன்றத்தில் இயற்றும் சட்டங்களை மத்திய அரசு கண்டுகொள்வதல்லை. பாஜக அரசு கொடுமைவாதியாக நடந்து கொள்கிறது.

Seeman supports KT raghavan: ‛உலகில் நடக்காததையா ராகவன் செய்துவிட்டார்...’ சீமான் பேட்டியால் பரபரப்பு!

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பதாக வந்த செய்தியை கவலையாகவே பார்க்கிறேன் . இரவில் தானாகவே மக்கள் அடங்கி விடுவார்கள்,  கேரளாவில் இரவில் ஊரடங்கு போடுவதாக கூறியது நகைச்சுவையாக இருக்கிறது.

அரசு கொரோனா தடுப்பு பணியை சரியாகவே செய்கிறது. மா.சுப்பிரமணியன் நன்றாகவே இயங்குகிறார் " என்று கூறினார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
Breaking News LIVE 19th Nov 2024: டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது - நீதிமன்றம்
Breaking News LIVE 19th Nov 2024: டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது - நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
Breaking News LIVE 19th Nov 2024: டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது - நீதிமன்றம்
Breaking News LIVE 19th Nov 2024: டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது - நீதிமன்றம்
மக்களே! பஸ்ஸில் இனி இந்த பொருட்களை ஃப்ரீயா கொண்டு போலாம்! அப்போ லக்கேஜ்?
மக்களே! பஸ்ஸில் இனி இந்த பொருட்களை ஃப்ரீயா கொண்டு போலாம்! அப்போ லக்கேஜ்?
RCB Bowling coach : ”கப் எடுத்து வைங்க ராஜேந்தர்” பீதியில் எதிரணிகள்.. மிரட்ட போகும் ஆர்சிபி-யின் புதிய பவுலிங் கோச்
RCB Bowling coach : ”கப் எடுத்து வைங்க ராஜேந்தர்” பீதியில் எதிரணிகள்.. மிரட்ட போகும் ஆர்சிபி-யின் புதிய பவுலிங் கோச்
Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்
Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்
Sabarimala: சாமியே சரணம்! மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்த வரலாறு தெரியுமா?
Sabarimala: சாமியே சரணம்! மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்த வரலாறு தெரியுமா?
Embed widget