எந்த காலத்திலும், எந்த கொம்பனாலும் திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்த முடியாது - அமைச்சர் பொன்முடி அதிரடி
எந்த காலத்திலும், எந்த கொம்பனாலும் திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்த முடியாது - அமைச்சர் பொன்முடி அதிரடி பேச்சு
சனாதனத்தை மக்கள் தூக்கி எரிய வேண்டும். எந்த காலத்திலும், எந்த கொம்பனாலும் திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்த முடியாது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாண்டுகளில் தமிழக அரசு செய்துள்ள சாதனை மலரை அமைச்சர் பொன்முடி, எம் பி ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் வெளியிட்டு முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆணைகளை வழங்கினார். அதன் பின் மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி இரண்டு ஆண்டு திமுக ஆட்சி தாய்மார்களுக்கு தான் அதிக நலதிட்டங்களை வழங்கியுள்ளார். கடந்த ஆண்டுகளில் ஆட்சி புரிந்தவர்கள் கடனை வாங்கி வைத்து சென்றுவிட்டார்கள் நிதி நிலைமை மோசமாக இருந்தபோது ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகளில் சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர் தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என பெருமிதம் தெரிவித்தார்.
மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தினால் 29 சதவிகிதம் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும், இடைநிற்றல் இருக்க கூடாது என்பதற்காக 7.5 சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இதனால் தமிழகத்தில் இரண்டு லட்சம் மாணவிகள் பயன்பெறுவதாக தெரிவித்தார். மேலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் கொண்டு வந்தது திமுக அரசு. நாங்கள் இந்துக்குகளுக்கு எதிரி என சிலர் கூறுகிறார்கள். எங்களுக்கும் கோயிலுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆணுக்கு பெண்ணும் சமம். அனைத்து சாதியினரும் சமம். எல்லா மதத்தினரும் சமம். மத வேறுபாடுகள், சாதிய வேறுபாடுகளை அகற்றியதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஒரு காலத்தில் சனாதனம் என்ற பெயரில் சாதிய வேறுபாடுகள் இருந்தது. சனாதனத்தின் பெயரில் மக்கள் சாதிகளாக பிரிக்கப்பட்டு இருந்தனர்.
இதனை குறிப்பிட்டு தான் முதல்வர் கூறியுள்ளார், எங்களுக்கு சனாதனம் வேண்டாம், திராவிட மாடல் தான் வேண்டும், எல்லோரும் சமமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். பெரியார், அண்ணா, கலைஞர் சொன்னதைதான் இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி செய்துக்கொண்டு இருக்கிறது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலம் தமிழ்நாடு, சிறந்த முதல்வர் என பெயர் எடுத்துள்ளார். இதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சிதான். சனாதனத்தை தூக்கி எரிந்துவிட்டு, அனைவரும் சமம் எனும் திராவிட் மாடல் ஆட்சிக்கு நீங்கள் துனை நிற்க வேண்டும். திராவிட் மாடல் ஆட்சியை எந்த காலத்திலும், எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது. தமிழகத்தின் நிரந்த முதல்வராக ஸ்டாலின் தான் இருப்பார் என்று தெரிவித்தார்.