ஊழல் கூட்டணி , எங்களை பற்றி பேசுவது சிரிப்பாக உள்ளது - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஊழலுக்காக நீதிமன்றம் கூறிய பிறகு ஒரு அமைச்சர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஊழல் கூட்டணிகாரர்கள் எங்கள் கூட்டணியை குறித்து பேசுவது சிரிப்பாக இருக்கிறது.

பணி ஆணை பெற்றவர்களுக்கு பாராட்டு
சென்னை அண்ணா நகரில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் கடந்த ஆண்டு யுபிஎஸ்சி, சிஎஸ்இ மற்றும் டிஎன்பிஎஸ்சி ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணி ஆணை பெற்றுள்ள முன்னாள் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று மாணவர்களை கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் , அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பால குருசாமி , முன்னாள் நீதிபதி விமலா, புதிய நீதி கட்சி தலைவர் AC சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.
மேடையில் பேசிய நிர்மலா சீதாராமன்,
இந்தியாவின் அதிகாரத்துவம் தற்போது ஒரு சீராக அமைந்துள்ளது. தொலைதூர கிராமங்களில் கூட நிர்வாக வழிநடத்தை சீராக இருந்து வருகின்றது. கண்காணிப்பு கேமிராக்கள் தெருக்களில் உள்ள மக்களின் மீது கவனிப்பது இல்லை, இந்தியாவின் அதிகாரத்துவத்தின் செயல்பாடுகள் மீது தான் உள்ளது.
உலகிலேயே இந்தியாவின் அதிகாரத்துவம் தான் சிறப்பானதாக உள்ளது. போட்டித் தேர்வு மாணவர்கள் ஒரு படிப்பில் மட்டுமே சிறந்தவராக இல்லாமல், அனைத்திலுமே சிறந்தவராக இருந்தால் மட்டுமே நன்றாக செயல்பட முடியும்.
2011 இல் இருந்து 915 UPSC அதிகாரிகள் நாடு முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.1950 முதல் 679 பேர் தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து சிவில் சர்வீஸில் நுழைந்துள்ள அதிகாரிகள் மிகவும் உயர் திறன் கொண்டவர்கள். பிரதமருடன் பிரகதி என்ற செயலி மூலம் ஏதோ ஒரு மூலையில் உள்ள ஜூனியர் அதிகாரி மாதம் ஒருமுறை தனது மாவட்டத்தின் தேவைகள் குறித்து உரையாடுகிறார்.
இந்தியாவின் அதிகாரத்துவம் ஒரு காலத்தில் ஊழல் நிறைந்த இடமாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உள்ள இந்த நிர்வாகத்தில் இருந்து ஊழல் என்ற சொல்லே வெகு தூரத்தில் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன்;
நான் புதுச்சேரி ஆளுநராக இருந்த போது அங்கே தலைமை செயலராக இருந்த அஸ்வின் குமார், 16 மணி நேரம் தொடர்ந்து பணி செய்து 300 கோடி ரூபாய்க்கான கோப்புகளை ஆய்வு செய்தார். இட ஒதுகீடு 10 நாட்களில் வேண்டும் என்ற போது அப்போது என்னுடன் இருந்த தலைமைச் செயலர் 10 நாட்களில் கொடுத்திருந்தார். 14 ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த புதுச்சேரியில் , நிர்மலா சீதாராமன் அமைச்சர் வந்த பிறகு தான் முறைப்படி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு காரணமாக இருந்த வரும் அப்போது தலைமைச் செயலராக இருந்தவரே.
புதிய நீதி கட்சித் தலைவர் ஏசி சண்முகம் பேசும்போது ;
நாங்கள் ஒரு கல்வியாளராக இந்தி மொழியை கற்றுக் கொடுத்து வருகிறோம். அனைவரும் இந்தி மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். ஏழை எளிய மாணவர்கள் இந்தி மொழியை கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தி மொழியை கற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது. தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் இந்தி தெரிந்தால் தான் பணி செய்ய முடியும். இதனை அரசியல் ஆக்கப் பார்க்கிறார்கள்.
தமிழக இளைஞர்கள் இந்தி மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் அனைவரும் இந்தி மொழியை கற்றுத் தேர வேண்டும்.
நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு ;
உலக அளவில் சிவில் சர்வீஸ் தேர்வு சிறந்த திறனாளிகளை தேர்வு செய்யக் கூடியது. நாட்டிற்கு சிவில் சர்வீஸ் தேர்வு மூலமாக பணியாற்றக் கூடிய வாய்ப்பு அரசு மூலமாக கொடுக்கப்படும்.
வண்டல் கமிஷன் அறிக்கை அமல்படுத்திய பிறகு தான் 2011 - க்கு பிறகு எல்லா விதமான சர்வீஸ் தேர்வுகளில் இருந்தும் தமிழகத்தை சேர்ந்த 900 மேற்பட்டோர் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.
இந்த எண்ணில் எனக்கு திருப்தி இல்லை, இன்னும் எதிர்பார்த்தேன். தமிழக இளைஞர்கள் அரசு உயர் பதவிக்கு வர அதிகமான வாய்ப்புள்ளது. பாரத நாட்டில் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு நிறைய உள்ளது.
ஜி.எஸ்.டி குறித்து பேசும்போது, ஒவ்வொரு மாநிலத்தின் நிதியமைச்சர்கள் உடனும் அமர்த்து பேசி தான் முடிவு செய்யப்படும் அதன் பிறகு தான் அதனை அமல்படுத்தப்படும்.
2017ஆம் ஆண்டு ஜி.எஸ்.டி வருவதற்கு முன்பு வாட் வரி இருந்ததாகவும் மக்களுக்கு அதிக வரி சுமை அது தான் அமைந்திருந்தது. மிடில் கிளாஸ் மக்களின் மீது வரிச் சுமை அதிகரித்தது என்ற வாதம் தவறானது.
ஜி.எஸ்.டி வந்த பிறகு தான் வரி விகிதம் குறைந்துள்ளது. இப்போது உள்ள கமிட்டியும் மேலும் அதனை குறைக்க முயற்சி செய்து வருகிறது.
ஜி.எஸ்.டியில் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் நான் ஒருவர் மட்டுமே எடுப்பது இல்லை. ஒவ்வொரு மாநில அமைச்சர்களுடன் ஆலோசனைக்கு பிறகே முடிவு எடுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சமத்துவம் கொண்டு வாருங்கள்
ஜாதி குறித்த விஷயத்தில் திமுக வெற்றி தேடுகிறதா ? தமிழ்நாட்டில் சமத்துவத்தை கொண்டு வாருங்கள். ஜாதி பெயருடன் பெயர்கள் இன்றும் சாலையில் செல்லும்போது பார்க்கிறேன். ஜாதி பெயரை சொல்லி மனித கழிவுகளை கலக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது இந்த நிலை வடமாநிலங்களில் கூட இல்லை.
ஊழலுக்காக நீதிமன்றம் கூறிய பிறகு ஒரு அமைச்சர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மற்றொரு அமைச்சர் வேறு காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார். ஊழல் கூட்டணிகாரர்கள் எங்கள் கூட்டணியை குறித்து பேசுவது சிரிப்பாக இருக்கிறது.
ஏதாவது ஒரு Proof கொடுங்கள்
தமிழ்நாட்டிற்கு பணம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். 100 நாள் வேலை திட்டத்திற்கு நேற்றைக்கு கூட அதற்கான பணத்தினை கொடுத்து இருப்பதாகவும் ஆனால் திமுகவினர் சேர்ந்த சிலர் மறைமுகமாக எஸ்.எம்.எஸ் மூலம் நன்றி தெரிவிக்கிறார்கள். ஆனால் பாராட்டு மனம் இன்றி நேரடியாக விமர்சனம் செய்கிறார்கள்.
கார்ப்ரே நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறுகிறார்கள். அதற்கு ஏதாவது ஒரு புரூப் கொடுங்கள், எந்த விதத்தில் எந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது என்ற ஆதாரத்தை கொடுங்கள்.
பிரதமர் இன்று கேரளாவில் திறந்து வைத்த துறைமுகம் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த துறைமுகத்தை கொடுத்தது அதானி, அதற்கான உரிமை கொடுத்தது காங்கிரஸ் தான். அந்த துறைமுகத்தை காங்கிரஸ் கொடுக்கும் போது ஒரு ஒப்பந்தம் கூட போடவில்லை. அது தான் ஊழல் மிகுந்த கூட்டணி கட்சி என அவர் தெரிவித்துள்ளார்.





















