National Education Policy என்பது No Education Policy போல் உள்ளது - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
''யாருக்கும் கல்வியை கற்றுக் கொடுக்கக் கூடாது என்பது தான் மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையாக உள்ளது''
திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயணக் பொதுக்கூட்டமானது கடந்த 3ஆம் தேதியன்று நாகர்கோவிலில் தொடங்கி 25ஆம் தேதி சென்னையில் முடிவடைகிறது. இந்நிலையில் இந்த பரப்புரை பயண பொதுக்கூட்டத்தின் 9ஆம் நாளான நேற்று காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காமராஜர் வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்று நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பயணப் பரப்புரை நூலினை வெளியிட்டு பேசினார், மாநில அரசு நேரடியாக மத்திய அரசை அணுக நேரம் இல்லதா காரணத்தினால் தான் டெல்லியில் இருந்து எஜெண்ட் (கவர்னர்) என்ற ஒரு நபரை நியமித்து உள்ளனர். அவர் தபால் காரர் வேலை மட்டும் தான் செய்ய வேண்டுமே தவிர அனுப்பும் தபால்களை பிரித்து பார்க்கும் வேலை செய்தால் அது அதிக பிரசங்கிதனமாக தான் உள்ளது. நாம் அந்த தபால்காரரை என்ன செய்ய வேண்டும், அவரை திரும்பி போகின்ற நேரம் வரும். இது அரசியல் சட்டத்தில் உள்ளது.
ஆகையால் அரசியல் சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதை நிறைவேற்ற வேண்டும், மாநில உரிமைகளை இவர்கள் பிரிக்கின்றார்கள், மத்தியில் இருப்பவர்கள் இங்கு ஆட்சிக்கு வர முடியாத காரணத்தால் இந்த ஆட்சிக்கு நல்ல பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக குறுக்கு வழியில் இவ்வாறு செய்கிறார்கள். ஆட்சிகள் மாறலாம் ஆனால் அடிப்படை தத்துவங்கள் ஒன்றுதான். பள்ளியில் மதிய, உணவு, புதக்கம், செருப்பு, சீருடை என இவையெல்லாம் கொடுத்து மாணவர்களை படி படி என கொள்கை வைத்தால், மத்திய அரசு இவர்களை படிக்காதே என்பதனை தான் கொள்கையாக வைத்துள்ளது.
மத்திய அரசு வைத்துள்ள தேசிய கல்வி கொள்கையான நேஷனல் எஜிக்கேசன் பாலிசியை (NEC) சரியாக பார்த்தல் நோ எஜிக்கேசன் பாலிசி என்பதைப்போல் தான் உள்ளது. யாருக்கும் கல்வியை கற்றுக் கொடுக்கக் கூடாது என்பது தான் மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையாக உள்ளது என மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். இந்நிகழ்வில் திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர்,காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி.எழிலரசன், மதிமுக மாநில துணைப் பொது செயலாளர் மல்லை சத்யா, மற்றும் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, தி.க. உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்