”பெயரை கூட சொல்ல மாட்டேங்குறீங்க?” - மேடையில் ஆதங்கப்பட்ட அமைச்சர் சேகர்பாபு
திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் இளைய அருணாவுக்கு மரியாதை செய்யவில்லை என மேடையிலேயே கண்டித்த அமைச்சர் சேகர்பாபு
சென்னை வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பாக டயாலிசிஸ் மருத்துவமனை திறப்பு விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு , மா.சுப்ரமணி கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் பிஎஸ் ரத்தன் சந்து மனோகர் மல்கோத்தி டயாலிஸ் மருத்துவமனை சென்னை வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பாக வடசென்னையில் உள்ள ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் 500 ரூபாய்க்கு டயாலிசிஸ் செய்ய உள்ளனர். இந்த மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் ஆகியோர் இணைந்து டயாலிசிஸ் மருத்துவமனையை திறந்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணி , வரும் காலங்களில் 500 ரூபாய் இல்லாமல் இலவசமாக டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் ராயபுரம் எம்.சி ரோடு பகுதி தீவு போல் இருந்தது இதனை மறைந்த முன்னாள் பகுதி செயலாளர் கட்பீஸ் பழனி பலமுறை அறிவுறுத்தி ஸ்டான்லி சுரங்கப்பாதை கட்டப்பட்டது என்று நினைவு கூர்ந்தார்.
அதே போல் அமைச்சர் சேகர்பாபு பேசும் போது ;
மறைந்த கட்பீஸ் பழனி அவர்களின் புதல்வர்கள் மற்றும் மறைந்த முன்னாள் நிர்வாகி சுந்தர்ராஜன் மகன் ஆகியோர் மற்றும் அனைத்து கட்சியினரையும் வரவேற்று பேசிக் கொண்டிருக்கையில் அனைவருக்கும் நிர்வாகிகளுக்கும் இங்கு அழைத்து சால்வை அனுவித்து மரியாதை செய்யப்பட்டது ஆனால் கட்சியில் பதவியில் இருந்தால் தான் மதிப்பு என்ற தோரணையில் இங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாவட்ட செயலாளரும் , மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சியின் நிலை குழு உறுப்பினருமான தா. இளைய அருணாவை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று பேசிய போது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து அவசர அவசரமாக அவர் மேடைக்கு அழைக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர்கள் வேக வேகமாக முன்னாள் மாவட்ட செயலாளர் இளைய அருணாவை மேடையில் அழைத்து சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது மேலும் மேடையில் உட்கார சொன்ன போது சிறிது நேரம் இளைய அருணா வேண்டாமென்று சொன்னார் அதன் பிறகு மேடையில் உட்கார்ந்தார்.
மேலும் சேகர்பாபு பேசவே நலத்திட்டங்கள் வழங்குவதற்கு வீரஸ் போன்ற துணிக்கடைகளில் தள்ளுபடி விலையில் துணிகளை வாங்குவோம் பணம் கொடுத்து விடுவோம் என்று தெரிவித்தார். இதனை அடுத்து அனைவரும் குபீர் என சிரித்தனர். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு சிறப்புரையாற்றினர்.
மேலும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கையில் , கட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சி இது இல்லை இது வண்ணாரப்பேட்டை கட்பீஸ் வியாபாரிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்களை முன்னிலைப்படுத்தினோம் என்று தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சென்னை வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் பியாரிலால் ஜெயின் , செயலாளர் முஹம்மது பஷீர் , மூத்த தலைவர் முத்துராஜ் , பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.