சினிமாவில் நடித்து விட்டால் அடுத்தது முதலமைச்சராகி விடலாம் என்ற கனவோடு இருக்கிறார்கள் - எம்.ஆர். விஜயபாஸ்கர்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் போன்று முதலமைச்சராகி விடலாம் என்ற கனவு பலிக்காது அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கம் கிராமங்கள் தோறும் மிகப்பெரிய இயக்கம் .
யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், சினிமாவில் நடித்து விட்டால் அடுத்தது முதலமைச்சராகி விடலாம் என்ற கனவோடு இருக்கிறார்கள் என கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை மறைமுகமாக பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித்தலைவருமான அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்ததன் அடிப்படையில் அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கரூர் மேற்கு ஒன்றியம் மற்றும் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி, புகளுர் நகர கழகத்தின் சார்பில்
நடைபெற்ற கழகத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், மக்கள் பணிகள் குறித்தும் கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக அமைப்புச்செயலாளர், முன்னாள் அமைச்சர் சின்னசாமி மற்றும் முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சரும், அதிமுக கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது ஒவ்வொரு வாக்குகளும் முக்கியம் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் கட்சிக்காக வாக்கு சேகரிக்கும் போது அவர்களுடன் சேர்ந்து இளைஞர்கள் ஒன்று சேர்வார்கள் 18 வயது கடந்த உடன் வாக்காளர்களாக ஓட்டளிக்க உள்ளனர்.
அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் இளைஞர்கள் அதிமுக கட்சியில் சேர வேண்டும் அப்பொழுது தான் அடுத்த தலைமுறைக்கு போகும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை துவங்கப்பட்ட பிறகு தான் அம்மா ஆட்சியில் இரண்டாவது முறையாக இரட்டை இலை சின்னம் வெற்றி பெற முடிந்தது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் சினிமாவில் நடித்து விட்டால் அடுத்தது முதலமைச்சராகி விடலாம் என்ற கனவோடு இருக்கிறார்கள் என எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் போன்று முதலமைச்சராகி விடலாம் என்ற கனவு பலிக்காது அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கம் கிராமங்கள் தோறும் மிகப்பெரிய இயக்கம் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்திவிட்டது என்று அப்பொழுது பேசினார்.