Watch Video: ‘வெல்க அண்ணன் உதயநிதி’ என்று சொன்ன திமுக எம்.பி..! வெளியே முழக்கமிடுங்கள் என்ற வெங்கய்ய நாயுடு!
மாநிலங்களவைக்கு திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று எம்.பிக்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
அதிமுகவைச் சேர்ந்த முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை எம்.பிக்களாக இருந்தனர். அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.
இதனையடுத்து அவர்கள் தங்களதுமாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். காலியாக இருந்த அந்தப் பதவிக்கு திமுக சார்பில் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த சூழலில் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிமுக சார்பாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். எனவே அந்த இடமும் காலியானது.
தொடர்ந்து அந்த பதவியடத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள திமுக சார்பில் அக்கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல அணி இணை செயலாளரான எம்.எம். அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கழக தலைவர் தளபதி அவர்களின் நல்லாசியுடன் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டேன்! @DMK4TN pic.twitter.com/EteLiDRZ02
— Dr Kanimozhi NVN Somu (@DrKanimozhiSomu) November 29, 2021
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் எம்.எம். அப்துல்லா, கனிமொழி, ராஜேஷ்குமார் ஆகியோர் மாநிலங்களவை எம்.பிக்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
வரலாற்று சிறப்புமிக்க இந்திய பாராளுமன்ற மாநிலங்களவையில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்று கொண்டேன்.இந்த வாய்ப்பினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கும் கழக இளைஞர் அணி செயலாளர் அண்ணன் @Udhaystalin அவர்களுக்கும் நன்றி pic.twitter.com/YmqJancBoV
— KRN Rajeshkumar (@krnrajeshkumar) November 29, 2021
இதனை அப்துல்லாவும், கனிமொழியும், ராஜேஷ்குமாரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு திமுகவினர் பலர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இந்தியாவின் இறையாண்மையை உறுதியாக பற்றி நிற்பேன்... pic.twitter.com/oprBetV9kH
— Pudukkottai M.M.Abdulla (@pudugaiabdulla) November 29, 2021
மூன்று பேரில் ராஜேஷ்குமார் பதவியேற்றுக்கொண்டபோது உறுதி மொழி ஏற்ற பிறகு வெல்க ஸ்டாலின், வெல்க அண்ணன் உதயநிதி என்று முடித்தார். அதற்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியில் சென்று முழக்கமிடுங்கள் என்று கூறினார். தற்போது அந்த வீடியோவை திமுகவினர் அதிகம் பேர் பகிர்ந்துவருகின்றனர். அதேசமயம், மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கும்போது உதயநிதியின் பெயரை குறிப்பிடுவது அவசியமான ஒன்றுதானா எனவும் சிலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
#JUSTIN | வெல்க அண்ணன் உதயநிதி.. மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட திமுகவைச் சேர்ந்த ராஜேஷ் குமார்!https://t.co/wupaoCQKa2 | #MKStalin | #UdhayanidhiStalin | #RajyaSabha | @arivalayam pic.twitter.com/DlaZN0ghks
— ABP Nadu (@abpnadu) November 29, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்