மேலும் அறிய

Stalin's Master Plan:உதயநிதி துணை பொதுச்செயலாளர், கனிமொழிக்கு பவரான பதவி - ஸ்டாலின் போடும் புது கணக்கு

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியின் துணை பொதுச் செயலாளர் பதவியும், அது பிரச்னையில் முடியாமல் இருக்க கனிமொழிக்கு ஒரு பவரான பதவியையும் ஸ்டாலின் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளராக ப்ரோமோஷன் வழங்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதற்கான வேலைகளை அவர் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. கனிமொழிக்கு அறிவாலயத்தில் தனி அறை அமைக்கப்பட்டதன் பின்னணியில் ஸ்டாலினின் பெரிய மாஸ்டர் ப்ளான் ஒன்று மறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

வேகமாக வளர்ந்துவரும் உதயநிதி ஸ்டாலின்

கலைஞரின் பேரன்.. முதல்வர் ஸ்டாலினின் மகன் என்பதை தாண்டி, அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த சில மாதங்களிலேயே இளைஞரணி செயலாளர், பிறகு எம்.எல்.ஏ, அடுத்ததாக அமைச்சர், பின்பு துணை முதலமைச்சர் என, கடகடவென அரசியல் க்ராஃபில் மேலோங்கி சென்றுவிட்டார் உதயநிதி ஸ்டாலின். அவர் அரசியல் வாரிசு என்றாலும், சினிமா நடிகராகவே முதலில் மக்களுக்கு அறிமுகமானார். 2018 மார்ச் முதல் தீவிர அரசியலில் குதித்தார் உதயநிதி. 2019-ல் அவரது தந்தை ஸ்டாலினால் தொடங்கப்பட்ட இளைஞரணிக்கு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு, மக்கள் மத்தியில் கவனம் பெற்றார். 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். 2022 ல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரானார். இதனையடுத்து, கடந்த ஆண்டு தனது தந்தை கலைஞர் பாணியில் தனது மகன் உதயநிதியை துணை முதலமைச்சராக நியமித்து அழகு பார்த்தார் மு.க. ஸ்டாலின். 

ஆனால், என்னதான் துணை முதல்வராக இருந்தாலும், அது வெறும் பொறுப்பு தானே தவிர கட்சிப் பதவி அல்ல. திமுகவின் முக்கிய கூட்டங்களில் கூட உதயநிதியால் கலந்துகொள்ள முடிவதில்லை என உணர்ந்த ஸ்டாலின், புது கணக்கு ஒன்றை போட்டுள்ளார். அது என்னவென்றால், உதயநிதிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு ஒன்றை வழங்க முடிவு செய்து, அதாவது, துணை பொதுச்செயலாளர் பதவியை ஸ்டாலின் வழங்கப்போவதாக கூறப்படுகிறது. தற்போது திமுகவில் திருச்சி சிவா, ஆ ராசா, கனிமொழி, ஐ. பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ஆகிய 5 பேர் துணை பொதுச்செயலாளர்களாக உள்ளனர். இந்நிலையில் தான், உதயநிதிக்கும் துணை பொதுச்செயலாளர் பதவியை வழங்கவுள்ளார் ஸ்டாலின் என தகவல்கள் வெளியானது.

கனிமொழிக்கு பவரான ஒரு பதவி

ஒருவேளை உதயநிதி துணை பொதுச்செயலாளர் ஆக்கப்பட்டால், கருணாநிதியின் இன்னொரு வாரிசான ஸ்டாலினின் சகோதரி கனிமொழியும் அதே பதவியில் இருப்பது சரியாக இருக்காது என கருதிய அவர், முதலில் கனிமொழிக்கு ப்ரோமோஷன் வழங்க முடிவு செய்துள்ளாராம். அதன் ஒரு முன்னோட்டமாகவே தற்போது அறிவாலயத்தில் கனிமொழிக்கு தனி அறை வழங்கி, அவரை அங்கு இருக்கையில் அமர்த்தி அழகு பார்த்துள்ளார் மு.க. ஸ்டாலின்.

ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினுக்காகத் தான் கனிமொழியை தேசிய அரசியலுக்கு ஸ்டாலின் திருப்பி விட்டதாக எதிர் தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், கனிமொழி விவகாரத்தில் ஸ்டாலின் கவனமாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சொல்கின்றனர். அதன்படியே, தலைமைக் கழகத்தில் உதயநிதியை நுழைக்கும் போது, அது பிரச்னையாக உருவெடுத்துவிடக் கூடாது என்பதால், கனிமொழியிடம் பவர் இருக்கக் கூடிய ஒரு பதவியை ஒப்படைத்துவிட வேண்டும் என்பதற்காக, புதிய பதவி உருவாக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. 

இந்த நிலையில், உதயநிதியின் துணை பொதுச்செயலாளர் பதவி குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
Toyota Innova: நோவாமல் போக இன்னோவா..! உண்மையா? டொயோட்டா செய்த மேஜிக் என்ன? நம்பிக்கையின் அடையாளம்
Toyota Innova: நோவாமல் போக இன்னோவா..! உண்மையா? டொயோட்டா செய்த மேஜிக் என்ன? நம்பிக்கையின் அடையாளம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்
Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
Toyota Innova: நோவாமல் போக இன்னோவா..! உண்மையா? டொயோட்டா செய்த மேஜிக் என்ன? நம்பிக்கையின் அடையாளம்
Toyota Innova: நோவாமல் போக இன்னோவா..! உண்மையா? டொயோட்டா செய்த மேஜிக் என்ன? நம்பிக்கையின் அடையாளம்
EPS:
EPS: "என்ன பூச்சாண்டி காட்டினாலும் எடப்பாடி பழனிசாமி பயப்படமாட்டான்.." இபிஎஸ் ஆவேசம்
Tata Car Offers: Punch முதல் Harrier வரை.. ரூபாய் 1.75 லட்சம் வரை தள்ளுபடி - டிஸ்கவுண்ட் அறிவித்த டாடா!
Tata Car Offers: Punch முதல் Harrier வரை.. ரூபாய் 1.75 லட்சம் வரை தள்ளுபடி - டிஸ்கவுண்ட் அறிவித்த டாடா!
திமுகவினர் கண்ணும் கருத்துமாக இருக்கணும்... அமைச்சர் கே.என்.நேரு அட்வைஸ் எதற்காக?
திமுகவினர் கண்ணும் கருத்துமாக இருக்கணும்... அமைச்சர் கே.என்.நேரு அட்வைஸ் எதற்காக?
Delhi Air Pollution: ரெட் சோன் சென்ற டெல்லி காற்று மாசு! தீபாவளிக்குப் பின் அதிகரிப்பு.. மக்கள் கடும் அவதி
Delhi Air Pollution: ரெட் சோன் சென்ற டெல்லி காற்று மாசு! தீபாவளிக்குப் பின் அதிகரிப்பு.. மக்கள் கடும் அவதி
Embed widget