மேலும் அறிய
Advertisement
பிடிஆர்- க்கு டம்மி பதவி, அப்போ ஆடியோ உண்மை..! போட்டு வாங்கும் வைகைச் செல்வன்..!
அமைச்சர் டிஆர்பி ராஜா தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளது திமுக அரசு ஒரு குடும்ப அரசியலுக்கு எடுத்துக்காட்டு - வைகை செல்வன்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ விவகாரம் உண்மை என்பதால் தான் அவருக்கு டம்மியான இலாகா கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி திமுகவின் லட்சணம் என அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைசெல்வன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது கூறினார். அதிமுக பொது செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் 69 வது பிறந்த நாளை ஒட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர்.
சாமி தரிசனம்
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் பிரசித்தி பெற்ற அருள்மிகு காமாட்சி அம்மன் கோயிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 69 வது பிறந்த நாளை ஒட்டி எடப்பாடி பழனிச்சாமி நலம் பெற வேண்டி சிறப்பு தங்க தேர் பவனி நடைபெற்றது. இதில் அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகை செல்வன் கலந்துகொண்டு தங்கத்தேர் பவனி வடம் பிடித்து இழுத்தனர். பின் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். உடன் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் உடன் ஏராளமான அதிமுகவினர் உடன் இருந்தனர்.
பின் செய்தியாளர்களை சந்தித்த வைகை செல்வன் பேசுகையில்,
முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் அத்து மீறி சென்று விட்டார் சொல்லதிகாரம், பொருள் அதிகாரம் போன்று கல் எரிகாரம் என்பதால் அவர் மீது உள்ள அமைச்சர் பதவி நீக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு அரணாக இருப்பதாக சொல்லிவிட்டு ஒரு இஸ்லாமியர் மீது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் வேறொரு இஸ்லாமியர்களுக்கு பதவி அளிக்கப்படவில்லை, தொழில்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள டிஆர்பி ராஜா குடும்ப அரசியலுக்கு எடுத்துக்காட்டு. அவர்கள் மீது பல தொழிற்சாலைகள், சாராய தொழிற்சாலைகள் உள்ளன ஆகையால் ஆவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ விவகாரம் உண்மை என்பதால் தான் அவருக்கு டம்மியான இலாகா கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி திமுகவின் லட்சணம் என அதிமுக செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சர்ருவமான வைகை செல்வன் காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion