மேலும் அறிய

Karnataka : "1 லட்சம் ரொக்கம், தங்கம், வெள்ளி" - கர்நாடக அமைச்சர் வழங்கிய தீபாவளி பரிசுப்பெட்டி..!

கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், பணம், தங்கம், வெள்ளி மற்றும் ஆடைகள் அடங்கிய பெட்டியை பரிசாக வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், தீபாவளியன்று தனது ஹோசப்பேட்டை தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பணம், தங்கம், வெள்ளி மற்றும் ஆடைகள் அடங்கிய பெட்டியை பரிசாக வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

அவர் வழங்கிய  பரிசுப் பெட்டியில் ரூ. 1 லட்சம் ரொக்கம், 144 கிராம் தங்கம், 1 கிலோ வெள்ளி, ஒரு பட்டுப் புடவை, ஒரு வேட்டி, ஒரு உலர் பழப் பெட்டி ஆகியவை இருந்ததாக தெரியவந்துள்ளது. ஆனந்த சிங் இரண்டு பெட்டிகளை பரிசாக வழங்கினார், ஒன்று மாநகராட்சி  உறுப்பினர்களுக்கும் மற்றொன்று கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்குமாகும்.

அவரது தொகுதியில் 35 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் ஒரு மாநகராட்சியும், 182 உறுப்பினர்களுடன் 10-கிராம பஞ்சாயத்துகளும் உள்ளன. மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்தலினால் இந்த பரிசுப்பெட்டியை கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் இதனை அறிந்த ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பரிசுப் பெட்டிகளை வாங்க  மறுத்துவிட்டனர்.

ஆனந்த் சிங்கின் ஆதரவாளர்கள் இதை மறுத்துள்ளனர். மேலும் அமைச்சர் அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற  பரிசுகளை அனுப்புவது வழக்கம் என கூறுகின்றனர். கர்நாடக சட்டசபைக்கு 224 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 2023 மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிபிடத்தக்கது.  

கர்நாடக மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மோடி பல்வேறு திட்டங்களை அம்மாநிலத்தில் செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் முயற்சியில், பா.ஜ.க, எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி இல்லாத ஓ.பி.சி வகுப்பினருக்குள் (OBC) உள்ள துணைக் குழுக்களை அடையாளம் கண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான உத்தியை மேற்கொண்டுள்ளது.
 
கர்நாடகாவில் ஓ.பி.சி மக்கள் தொகை சுமார் 33% என மதிப்பிடப்பட்டுள்ளது, பா.ஜ.க.,வின் பாரம்பரிய லிங்காயத் வாக்கு வங்கி மற்றும் பழங்குடி சமூகங்களின் ஒரு பகுதி ஆகியவற்றின் ஆதரவைத் தாண்டி, ஓ.பி.சி.,க்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட துணை சமூகங்களிடையே அதன் ஆதரவு தளத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பா.ஜ.க எண்ணுகிறது. இந்த ஓ.பி.சி சமூகங்களின் மேம்பாடு மற்றும் நலனில் மட்டுமே கவனம் செலுத்துவதற்காக கர்நாடகா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் ஒரு சிறப்புப் பிரிவை மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்றும் பசவராஜ் பொம்மை கூறியிருந்தார். உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சமீப காலங்களில் பா.ஜ.க கடைப்பிடித்த உத்தியைப் போலவே இதுவும் உள்ளது, அங்கு மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள யாதவர்கள் போன்ற ஆதிக்கக் குழுக்களுக்குப் பதிலாக சிறிய பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குழுக்கள் மீது பா.ஜ.க கவனம் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
Embed widget