மேலும் அறிய

DMDK JOIN DMK Alliance: அமித்ஷா-எடப்பாடியின் மெகா கூட்டணி கனவிற்கு செக்.! ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளானால் திணறும் அதிமுக

DMDK JOIN DMK Alliance: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக, இதன் காரணமாக அதிமுகவின் மெகா கூட்டணி பிளான் திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

நெருங்கும் தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளது. இந்த கூட்டணிக்கு பலத்த போட்டி கொடுக்கும் வகையில், அதிமுக சார்பாகவும் மெகா கூட்டணி அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு ஏற்ப பாமகவை தங்கள் அணியில் இணைத்த எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அமமுகவையும் தங்கள் அணியில் இணைத்தது. அடுத்ததாக தேமுதிகவையும் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திமுக கூட்டணியில் தேமுதிக

இதற்காக ராஜ்யசபா சீட் தருவதாகவும் அதிமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் NDA கூட்டணிக்கு தேமுதிக உறுதியாக வரும் என எதிர்பார்த்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷா விற்கு இது பெருத்த ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில் தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதிமுக கூட்டணியா -திமுக கூட்டணியா என முடிவெடுக்காமல் இருந்து வந்த பிரேமலதா சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தனர். அதேநேரம் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் திமுக ஒவ்வொரு தொகுதிகளிலும் குறைந்தது 5000 முதல் 25,000 வாக்குகளை கொண்டிருக்கும் தேமுதிகவை இணைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்

இந்த நிலையில் தான்  ஈஷா மையத்தில் நடந்த மகா சிவ ராத்திரி நிகழ்ச்சியில் எஸ்.பி. வேலுமணியோடு இணைந்து பிரேமலதா கலந்து கொண்டதை வைத்து அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என தகவல் பரவியது. ஆனால் திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. பிரேமலதாவின் முடிவு பாஜக-அதிமுகவிற்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தேமுதிகவின் வரவு திமுக கூட்டணிக்கு கூடுதல் வலிமையை அதிகரித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. தேமுதிக விற்கு பக்கபலமாக இருக்க கூடிய தெலுங்கு பேசும் மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட சமூக வாக்குகளும் சிதறாமல் தேமுதிக விற்கு இம்முறை கிடைக்கும் இதை எல்லாம் கருத்தில் கொண்டு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதாக தெரிகிறது

அதிகரிக்கும் தேமுதிக பலம்

மேலும் வட தமிழ்நாட்டின் வலுவான பாமக இரண்டாக பிரிந்து வலுவற்ற சூழலில் தேமுதிக மீண்டும் வட தமிழ்நாட்டில் தனது இடத்தை பிடித்து கட்சியை வலுப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.  திமுக கூட்டணி மேலும் வலுவடைந்து 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை அடைய தேமுதிக உதவும் – தேமுதிக வின் இரண்டாவது இன்னிங்க்ஸ்ஸை தொடங்க திமுக கூட்டணி உதவும் ஆகவே இத்  பிரேமலதாவின் அரசியல் சாதுர்ய முடியாக பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!

Embed widget