மேலும் அறிய

மயிலாடுதுறையில் முதல்வரின் ரோடு ஷோ நிகழ்வில் டிஎஸ்பிக்கு உதை...! என்ன நடந்தது...?

தமிழக முதலமைச்சர் நடை பயண ரோடு ஷோ நிகழ்ச்சியில்  கூட்டத்திலிருந்து உள்ளே வந்த அரசு  வழக்கறிஞர் அருள்தாஸ் என்பவரை போலீசார் தடுத்த நிலையில் வழக்கறிஞர் டி.எஸ்.பி-யை எட்டி உதைக்க முயன்றதால் பரபரப்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மற்றும் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இருநாள் சுற்றுப்பயணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவரது வருகையால் மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

முதல்வருக்கு வரவேற்பு மற்றும் கலைஞர் சிலை திறப்பு

மயிலாடுதுறை மாவட்ட நுழைவு எல்லையான கொள்ளிடத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட உயர் அரசு அதிகாரிகள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சோதியகுடி, செம்பதனிருப்பு மற்றும் மயிலாடுதுறையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவ வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் மீதான மக்களின் அன்பையும் மரியாதையையும் பறைசாற்றும் வகையில் இந்நிகழ்வில் திரளானோர் திரண்டிருந்தனர்.


மயிலாடுதுறையில் முதல்வரின் ரோடு ஷோ நிகழ்வில் டிஎஸ்பிக்கு உதை...! என்ன நடந்தது...?

உணர்ச்சி பொங்க ஏற்றப்பட்ட திமுக கொடி

மேலும் சிலை திறப்பு விழாவைத் தொடர்ந்து அங்கே அமைக்கப்பட்டுள்ள 60 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அப்போது, கொடிக்கம்பத்தில் பொருத்தப்பட்ட தானியங்கி மோட்டார் இயங்காததால், அங்கிருந்த திமுக தொண்டர்கள் இரும்பு கொடி கம்பியை வெறும் கையால் உணர்ச்சிபொங்க இழுத்து ஏற்றி வைத்தனர். இது திமுக தொண்டர்களின் கட்சிப் பற்றையும், முதலமைச்சர் மீதான அவர்களது பற்றுதலையும் வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இந்த நிகழ்வு கூட்டத்தினர் மத்தியில் பெரும் கரவொலியைப் பெற்றது.


மயிலாடுதுறையில் முதல்வரின் ரோடு ஷோ நிகழ்வில் டிஎஸ்பிக்கு உதை...! என்ன நடந்தது...?

நேற்று மதியம் முதல்வர் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின் பூர்விக இல்லத்திற்கு சென்று உணவு உண்டு ஓய்வெடுத்தார். தொடர்ந்து நேற்றிரவு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கினர்.

மயிலாடுதுறையில் ரோடு ஷோ 

இந்நிலையில் 
மயிலாடுதுறையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ நிகழ்ச்சி மூலம் பொது மக்களை சந்தித்து கச்சேரி சாலையில் உள்ள கட்சி அலுவலகமான புதுப்பிக்கப்பட்ட அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். நான்கு கிலோமீட்டர் தூரம் இரண்டு பக்கமும் பேரிகார்டு தடுப்புகள் போடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரண்டு பக்கமும் நின்று முதலமைச்சர் மு.க ஸ்டாலினை வரவேற்றனர். 


மயிலாடுதுறையில் முதல்வரின் ரோடு ஷோ நிகழ்வில் டிஎஸ்பிக்கு உதை...! என்ன நடந்தது...?

முதலமைச்சர் நடைபயணமாக கச்சேரி சாலை கட்சி அலுவலகம் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அங்கு திமுக அரசு வழக்கறிஞர் அருள்தாஸ் என்பவர் பொதுமக்கள் கூட்டத்தில் இருந்து திடீரென்று முதல்வர் நடைந்து வரும் சாலை உள்ளே புகுந்துள்ளார். இதைப் பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக இழுத்துச் சென்றனர்.


மயிலாடுதுறையில் முதல்வரின் ரோடு ஷோ நிகழ்வில் டிஎஸ்பிக்கு உதை...! என்ன நடந்தது...?

தடுத்த காவலர் உதைத்த வழக்கறிஞர் 

அப்போது கட்சி பொறுப்பாளர்கள் அவர் அரசு வழக்கறிஞர் என்று சொன்னதன் பெயரில் போலீசார் அருள்தாஸ்சை விடுவித்தனர். தன்னை இழுத்துச் சென்றதால் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் அருள்தாஸ்சை கட்சி பொறுப்பாளர்கள் சமாதானப்படுத்தினர்.  அப்போது அருள்தாஸ் திடீரென்று அங்கு பணியில் இருந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த டி.எஸ்.பி  ஒருவரை எட்டி உதைக்க முயன்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து திமுக நிர்வாகிகள் ஒரு சிலர் அரசு வழக்கறிஞரை அடித்ததாக கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தப்பட்டனர். முதலமைச்சர் வரும் சமயத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


முன்னதாக நேற்று இருவேறு இடங்களில் கலைஞர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் சோதியகுடியில் மாவட்ட துணை செயலாளர் ஞானவேலனுக்கும், செம்பதனிருப்பு பகுதியில் திமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

TVK VCK: திமுக-வுடன் உறவு கொண்டாடும் திருமா..! பாமக-வுடன் கூட்டு சேருகிறதா தவெக?
TVK VCK: திமுக-வுடன் உறவு கொண்டாடும் திருமா..! பாமக-வுடன் கூட்டு சேருகிறதா தவெக?
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
"தமிழ்நாட்டுல காலே வைக்க முடியல, இதுல 2031-ல ஆட்சியா?" - அண்ணாமலையை வாரிச் சுருட்டிய எம்பி சுதா!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Chennai Power Cut: சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
Embed widget