மேலும் அறிய

மக்களுடன் தான் கூட்டணி! - சீர்காழி தேர்தல் களத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபாஷ்...

சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் 28 வயதான இளைஞர் சுபாஷ் வேட்பாளராகப் போட்டியிட்டு நிலையில் சட்டநாதர் கோவிலில் வழிபாடு செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

சீர்காழி: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் பணிகளை அதிரடியாகத் தொடங்கியுள்ளது. ஆன்மீகம், சுற்றுச்சூழல் மற்றும் தொகுதி மேம்பாடு ஆகியவற்றை முன்னிறுத்தி அக்கட்சியின் வேட்பாளர் சுபாஷ் தனது முதல் கட்டப் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கினார்.

சட்டநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

சீர்காழி சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மணிகிராமம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் சுபாஷ் என்பவரை கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை சீர்காழியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டநாதர் சுவாமி கோவிலுக்கு வருகை தந்த வேட்பாளர் சுபாஷ், அங்குச் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார்.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சாமி தரிசனம் செய்த அவர், தொகுதியின் முன்னேற்றத்திற்காகவும், மக்கள் நலனிக்காகவும் வேண்டிக்கொண்டார். கோவிலுக்கு வெளியே வந்த அவருக்கு நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பசுமைப் புரட்சி மற்றும் துண்டுப் பிரசுரம்

வழக்கமான அரசியல் கட்சிகளைப் போலன்றி, சுற்றுசூழலைப் பாதுகாக்கும் விதமாகத் தனது பிரச்சாரத்தை அவர் தொடங்கினார். கோவிலுக்கு வந்த பொதுமக்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கி, பசுமையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். "மரம் வளர்ப்பது என்பது வெறும் அரசியல் கிடையாது, அது நம் வாழ்வாதாரத்தின் ஒரு பகுதி" என்று அவர் மக்களிடம் உரையாற்றினார்.

தொடர்ந்து, "மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு" என்ற பெயரிலான துண்டுப் பிரசுரங்களை வழங்கிய அவர், விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். இந்தத் துண்டுப் பிரசுரங்களில் கட்சியின் கொள்கைகள் மற்றும் தொகுதிக்கான வாக்குறுதிகள் விரிவாக இடம்பெற்றிருந்தன.

சீர்காழி தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகள்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வேட்பாளர் சுபாஷ், சீர்காழி தொகுதிக்கான தனது திட்டங்களை விரிவாகப் பட்டியலிட்டார். அவர் கூறியதாவது:

"மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைய உள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றாலும், சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களின் வசதிக்காகச் சீர்காழி அரசு மருத்துவமனையை மாவட்ட அளவிலான மருத்துவமனையாக (District Hospital) தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்போம்.

மேலும், எங்களது தொகுதியில் உள்ள திருவாலி மற்றும் பெருந்தோட்டம் ஆகிய ஏரிகளை முறையாகத் தூர்வாரி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதோடு, அந்த இடங்களைச் சுற்றுலா மையங்களாக மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதையும், விவசாயிகளின் நீராதாரம் பெருகி விளைச்சல் அதிகரிப்பதையும் உறுதி செய்வோம்."

கூட்டணி குறித்த அதிரடி நிலைப்பாடு

2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குச் சுபாஷ் மிகவும் கறாரான பதில்களை அளித்தார்,

"நாம் தமிழர் கட்சி 2026 தேர்தலில் தமிழக மக்களுடன் 234 தொகுதிகளிலும் கூட்டணி வைத்துள்ளது. தீமைக்கு மாற்று மற்றொரு தீமை கிடையாது. நாங்கள் மதுவற்ற தமிழகத்தை உருவாக்க டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கூறுகிறோம். அப்படி இருக்கும்போது, மதுக் கடைகளைத் திறந்து வைத்திருக்கும் கட்சிகளுடன் நாங்கள் எப்படி கூட்டணி அமைக்க முடியும்? எங்களுடன் யார் கூட்டணிக்கு வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்?

திராவிடக் கட்சிகள் ஊழலற்ற, கரைபடியாத கட்சிகள் கிடையாது. உண்மையான மாற்று அரசியல் என்று பேசும்போது, பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிகளுடன் கைகோர்ப்பது என்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். எனவே, தனித்துவமான கொள்கைகளுடன், விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு மக்களின் ஆதரவைப் பெறுவோம்," என்று அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

மக்களிடையே எழுந்துள்ள எதிர்பார்ப்பு

இளைஞரான சுபாஷ், தனது பிரச்சாரத்தின் முதல் நாளிலேயே உள்ளூர் பிரச்சனைகளான மருத்துவமனை தரம் உயர்த்துதல் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு ஆகியவற்றைப் பேசியது தொகுதி மக்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தங்களை முன்னிறுத்தும் நாம் தமிழர் கட்சியின் இந்தத் தேர்தல் தொடக்கம், சீர்காழி தொகுதியில் மும்முனைப் போட்டியை உருவாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் மற்றும் விழிப்புணர்வு கொண்ட வாக்காளர்களை இலக்காகக் கொண்டு, தொகுதி முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

அரசு கல்லூரி மாணவர்கள் போராடத் தடை? முதல்வர் பரிசீலனை - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
அரசு கல்லூரி மாணவர்கள் போராடத் தடை? முதல்வர் பரிசீலனை - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
விஜய் விளம்பரத்தில் நடித்த ஜோய் அலுக்காசுடன் ஒப்பந்தமா? அதிமுக சந்தேகத்தை கிளப்புவது ஏன்?
விஜய் விளம்பரத்தில் நடித்த ஜோய் அலுக்காசுடன் ஒப்பந்தமா? அதிமுக சந்தேகத்தை கிளப்புவது ஏன்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
Embed widget