மேலும் அறிய

”மன்மோகன் சிங்கை பாஜக இறுதியில் அவமதித்துவிட்டது” கொந்தளித்த ராகுல், ஸ்டாலின்..இறுதிச் சடங்கில் நடந்தது என்ன?

Manmohan Singh Funeral Insulted: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, இறுதிச் சடங்கில் அவமதித்து விட்டதாக ராகுல் , ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நேற்று முன்தினம் இரவு காலாமானதை தொடர்ந்து, அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி இன்று நடைபெற்றது. அவரது இறுதி அஞ்சலியானது, டெல்லியில் உள்ள நிகம் போகத் தகன மைதானத்தில் நடந்தது. அவரது உடலானது அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் ஒதுக்காமல், நிகம் போகத் தகன மைதானத்தில் இறுதிச் சடங்கு செய்ய வேண்டிய சூழ்நிலையை மத்திய அரசு ஏற்படுத்திவிட்டது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதன் மூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அவமதித்து விட்டதாக எதிர்க்கட்சியினர் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். 

ராகுல் காந்தி:

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் , மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்ததாவது  “ மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், "பாரத மாதாவின் சிறந்த மகனும், முதல் சீக்கிய பிரதமருமான மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு நிகம்போத் காட்டில் வைத்து அவமதிக்கப்பட்டார். பத்தாண்டு காலம், இந்தியாவை பிரதமராக வழிநடத்தி, தேசத்தை மாற்றினார். அவரது கொள்கைகள் பின்தங்கிய மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மேம்படுத்தின.
"இதுவரை, அனைத்து முன்னாள் பிரதமர்களின் கண்ணியத்தையும் மதித்து, அவர்களின் இறுதிச் சடங்குகள் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் இறுதி சடங்கு  செய்யப்பட்டது, இதனால் ஒவ்வொரு நபரும் எந்த சிரமமும் இன்றி இறுதி தரிசனம் மற்றும் அஞ்சலி செலுத்தினர். 

மன்மோகன் சிங் எங்களின் மரியாதைக்குரியவர். அரசாங்கம், நாட்டின் இந்த மகத்தான மகனுக்கும் அவரது பெருமைமிக்க சமூகத்திற்கும் மரியாதை காட்டியிருக்க வேண்டும், ”என்று  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்..

காங்கிரஸ் தலைவர் கார்கே:

மேலும், காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்ததாவது “ முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் , “ அவரது இறுதி சடங்கு நடைபெறும் இடத்திலேயே நினைவகம் அமைய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்:

முன்னாள் மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கு பொருத்தமான இடத்தில் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான உரிமையை அவரது குடும்பத்தினருக்கு மறுக்கும் பாஜக அரசின் முடிவானது, அவரது உயர்ந்த மரபு மற்றும் சீக்கிய சமூகத்தை  அவமதிப்பதாகும். குடும்பத்தின் கோரிக்கையை நிராகரித்து, இரண்டு முறை பிரதமராக இருந்தவரை நிகம்போத் காட் பகுதிக்கு இறுதிச் சடங்கு நடத்தப்பட்ட சம்பவமானது, ஆணவம், பாரபட்சம் மற்றும் அவரது மகத்தான பங்களிப்பை பொதுமக்களின் நினைவிலிருந்து அழிக்க திட்டமிட்ட முயற்சி.

டாக்டர் மன்மோகன் சிங்கின் தலைமை இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியது மற்றும் மில்லியன் கணக்கானவர்களை வறுமையிலிருந்து மீட்டது. ஒரு அரசியல்வாதியை அவமரியாதை செய்வது இந்தியாவின் முன்னேற்றத்தையே அவமதிப்பதாகும். தலைசிறந்த தலைவர்களை இழிவுபடுத்திய கறை வரலாற்றில் இருந்து மறையாது! என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு விளக்கம்:

இந்நிலையில் , மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா தெரிவித்ததாவது “ நினைவிடம் அமைக்க இடம் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா தெரிவித்துள்ளார். ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்ட பின்னரே நினைவிடம் அமைக்க நிலம் ஒதுக்கப்படும் என்பதால் , தற்போது இறுதிச் சடங்கு நடைபெறட்டும் என உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார். 
 
இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்திலேயே , நினைவகம் அமைக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியினரின் கோரிக்கையாக இருக்கிறது. இதனால், மத்திய அரசு மன்மோகன் சிங்கை அவமதித்து விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேட்பனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேட்பனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேட்பனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேட்பனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Embed widget