Lok Sabha Election Results 2024: ஜூன் 7-ல் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம்!
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
![Lok Sabha Election Results 2024: ஜூன் 7-ல் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம்! Lok Sabha Election Results 2024 NDA to held Party Ruling Chief Ministers Meeting On June 7 Lok Sabha Election Results 2024: ஜூன் 7-ல் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/05/1af023ee7860e2f54f2346925b2020421717573857617333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் நாளை மறுநாள் (ஜூன்,7-ம் தேதி) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. 291 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. தனது கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. ஜூன், 7ம் தேதி மதியம் 2 மணிக்கு புது டெல்லியில் நடைபெற உள்ளது.
18ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையைப் பிடிக்க 272 இடங்கள் தேவை. இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க. ஆலோசித்து வருகிறது.
இன்று (ஜூன் 5) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)