மேலும் அறிய

ஓபிஎஸ் வசமுள்ள 3 வாய்ப்புகள் - என்ன செய்ய போகிறார் ஓ. பன்னீர்செல்வம் - கூர்நோக்கு அலசல்

ஒற்றைத் தலைமை பிரச்சினையில், அதிமுக-வில் யார் கை ஓங்கப் போகிறது, யாருடைய தலைமையின் கீழ் அதிமுக செயல்படப் போகிறது என்பதற்கு ஆணித்தரமாக ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

ஒற்றைத் தலைமை பிரச்சினையில், அதிமுக-வில் யார் கை ஓங்கப் போகிறது, யாருடைய தலைமையின் கீழ் அதிமுக செயல்படப் போகிறது என்பதற்கு ஆணித்தரமாக ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன்படி, இபிஎஸ் வசம் சென்றது அதிமுக. மற்றொரு போட்டியாளராக இருந்த ஓபிஎஸ் பெரும் பின்னடைவுக்கு ஆளானார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பார்த்தால், தற்போது அவர் அதிமுக உறுப்பினரே இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டாக பல்வேறு வழக்குகள், இடைக்கால தீர்ப்புகள், கூட்டங்கள், சச்சரவுகள், சர்ச்சைகள் என தமிழகத்தின் பெரிய கட்சிகளில் ஒன்றான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் சந்தித்து வந்தது. ஓபிஎஸ்-ஸா, இபிஎஸ்-ஸா என்ற நீண்ட கால இழுபறிக்கு, இன்று தெளிவாக இபிஎஸ் பக்கம்தான் அதிமுக என கூறியுள்ளது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம் என்ன?

இந்த தீர்ப்பில், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என கூறியிருக்கிறது. இந்தப் பொதுக்குழுவில்தான், அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமல்ல, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சியின் பதவிகள் மட்டுமல்ல, அடிப்படை உறுப்பினர் என்பதில் இருந்தும் நீக்கப்பட்டனர். கடந்தாண்டு உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பினை, அப்படியே ஏற்று, தற்போது உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், ஓபிஎஸ் அணியிருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

ஓபிஎஸ் மீண்டும் நீதிமன்றம் செல்ல முடியுமா?

இந்தத் தீர்ப்பினால், பெரும் அடி வாங்கியுள்ள ஓபிஎஸ், மீண்டும் நீதிமன்றம் செல்லமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்ட நிபுணர்கள் பலரிடம் பேசியபோது, மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும் சீராய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அந்த சீராய்வு வழக்கு முடிந்து தீர்ப்பு வருவதற்குள், அதிமுக- முழுமையாக, இபிஸ் அதிமுக-வாக மாறியிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே, சட்டரீதியாக பெரிய அளவுக்கு, இபிஎஸ்-யின் வெற்றி நடைக்கு, ஓபிஎஸ்-ஸால் தடை போட முடியாது என்பதுதான் பெரும்பாலான சட்ட நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. 

ஓபிஎஸ் வசமுள்ள 3 வாய்ப்புகள் - என்ன செய்ய போகிறார் ஓ. பன்னீர்செல்வம் -  கூர்நோக்கு அலசல்

ஓபிஎஸ்-ஸுக்கு உள்ள 3 வாய்ப்புகள்:

சட்டரீதியாக உடனடியாக எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத சூழலில், தற்போது ஓ. பன்னீர் செல்வம் என்ன செய்யப்போகிறார், அவருக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்து பல்வேறு தரப்பினருடன் நாம் பேசியதில் இருந்து, மூன்று விதமான வாய்ப்புகள் அவருக்கு இருப்பது தெரிய வருகிறது. அந்த வாய்ப்புகள் குறித்து தற்போது பார்ப்போம்.

1. இணைப்பு என்ற பெயரில் சரணாகதி: 

அதிமுக, இரட்டை இலை என அனைத்தும் தற்போது இபிஎஸ் வசம் சென்றுவிட்டதால், தன்னுடைய ஆதரவாளர்களுடன், கட்சியைப் பலப்படுத்துகிறோம், பொது எதிரி திமுக-வை வெல்வோம் என்ற முழக்கத்துடன், இபிஎஸ் சம்மதித்தால், கிட்டத்தட்ட சரணாகதி என்ற ரீதியில் அதிமுக-வில் இணைவது ஒரு வழி.

2. சசிகலாவுடன் நேரடியாக கைகோர்த்து களமிறங்குவது:

தாம் தொடர்ந்து வழக்கின்மூலம், தாம்தான் அதிமுக- வில் பொதுச்செயலாளர் என இன்னமும் கூறி வரும் சசிகலாவுடன், இணைந்து, இபிஎஸ்-ஸை எதிர்த்து அரசியல் செய்ய ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே பலமுறை சசிகலாவைச் சந்திப்பேன் எனக் கூறி வரும் ஓபிஎஸ், தற்போது இந்த  வழக்கில் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக, சசிகலாவை நேரில் சந்தித்து, அவருடன் சேர்ந்து, அதிமுக மீட்பு போராட்டத்தில் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. 

3.  பாஜக-வில் சங்கமிப்பது:

இபிஎஸ் வசம் அதிமுக சென்றுவிட்டதால், இனி, அங்கு தமக்கு பெரிய வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்பது மட்டுமல்ல, அதற்கு இபிஎஸ், இடமும் கொடுக்கமாட்டார் என்பதுதான், அண்மைக்காலத்தில் இருவருக்கும் இடையே நடைபெற்ற அறிக்கைப் போர் சுட்டிக்காட்டுகிறது. அந்தளவுக்கு சமரசத்திற்கு வாய்ப்பு இல்லை என்பதை அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளே ஒப்புக் கொள்கின்றனர். இந்தச் சூழலில், தம்முடைய ஆதரவாளர்களுடன், பாஜக-வின் மேல்மட்டத்தலைவர்களிடம் இருக்கும் செல்வாக்கின் காரணமாக, பாஜக-வில் ஓபிஎஸ் ஐக்கியமாவதற்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் கூர்நோக்கர்கள் பலகாலமாக கூறி வருகின்றனர்.  இந்த வாய்ப்பையும் மறுப்பதற்கு இல்லை. 

என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?

மேற்கூறிய 3 வாய்ப்புகளில் எதை தேர்வு செய்வது அல்லது ஏதேனும் அதிரடி நடவடிக்கையா என்பதையெல்லாம், அடுத்த சில தினங்களில், வெளிப்படையாக ஓபிஎஸ் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போதைய சூழலில், தமது ஆதரவாளர்கள், சட்ட நிபுணர்கள் உள்ளிட்டோருடன் அடுத்த 2 அல்லது 3 தினங்களுக்கு, தொடர் ஆலோசனையில் ஓபிஎஸ் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது. அதுவரை, அவரது ஆதரவாளர்களில் யாரேனும் ஒரு முன்னணி நிர்வாகி, சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் அடுத்த கட்ட முடிவை அறிவிப்போம் என பேட்டி தருவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, தற்போதைக்கு, ஒபிஎஸ்-ஸும் அவரது தரப்பும் மெளனிக்கிறது எனக் கூறினாலும் தவறில்லை. 

அணி மாறுவதற்கு வாய்ப்புகள்:

ஈபிஎஸ் வசம் அதிமுக சென்றுவிட்டதால், இதுநாள் வரை, ஓபிஎஸ் பின்னால் அணிவகுத்து வந்த முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள்  ஆகியோர் மீண்டும் ஈபிஎஸ்ஸை நோக்கி செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே, ஓபிஎஸ்-ஸின் உண்மையாக விசுவாசிகள் யார் என்பது இன்னும் சில தினங்களுக்குள் அவர் மட்டுமல்ல, நாம் அனைவரும் அறிந்துக் கொள்ள முடியும். 

மீண்டும் ஒற்றைத் தலைமையின் கீழ் அஇஅதிமுக:

தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, சில ஆண்டுகளாக நிலவி வந்த குழப்பம் நீங்கி, மீண்டும் இபிஎஸ் எனும் ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுக சென்றுள்ளது. இந்த வெற்றி உற்சாகம், நடைபெறும் இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget