மேலும் அறிய

KT Raghavan Video: கே.டி.ராகவன் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க தனிக்குழு

பெண்ணிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசிய கே.டி.ராகவன் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன். இவர் பா.ஜ.க.விற்கு ஆதரவாக பல்வேறு விவாத மேடைகளில் பங்கேற்று பேசி வருகிறார். இந்த நிலையில், பெண் ஒருவருடன் வீடியோ காலில் மிகவும் ஆபாசமாக கே.டி.ராகவன் நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், கே.டி.ராகவன் தனது மாநில பொதுச்செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், கே.டி.ராகவன் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க தமிழக பா.ஜ.க. தனி குழு ஒன்றை அமைத்துள்ளது.  இந்த குழுவினர் கே.டி.ராகவன் மீதான குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து கட்சிக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

KT Raghavan Video: கே.டி.ராகவன் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க தனிக்குழு

தமிழக பா.ஜ.க.வில் முக்கிய நிர்வாகியாக வலம் வருபவர் கே.டி.ராகவன். இந்த நிலையில், இவர் பெண் ஒருவரிடம் செல்போனில் வீடியோ கால் மூலமாக ஆபாசமாக பேசுவதுடன், அந்த பெண்ணிடம் மிகவும் ஆபாசமாக வீடியோ காலிலே நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வெளியானது. இந்த வீடியோவை பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் தன்னுடைய யூ டியூப் தொலைக்காட்சியில் வெளியிட்டார். உடனடியாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், கே.டி.ராகவனுக்கு பல தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்ததுடன், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த நிலையில், கே.டி.ராகவன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். மேலும், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தன்னையும், தன் கட்சியையும் களங்கப்படுத்தவே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து பேசியதாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், இதை சட்டப்படி சந்திப்பபதாகவும், தர்மம் வெல்லும் என்றும் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

KT Raghavan Video: கே.டி.ராகவன் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க தனிக்குழு

இந்த விவகாரம் தொடர்பாக, கருத்து தெரிவித்திருந்த மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் என்னை இரு முறை நேரில் சந்தித்து இதுதொடர்பாக பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். ஆனால், வீடியோ ஆதாரங்களை என்னிடம் காட்ட கூறியதற்கு அவர் மறுத்துவிட்டார். பின்னர், மூன்றாவது முறையாக என்னுடைய தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை ஆராயாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறினேன். பின்னர், அவர் வீடியோவை வெளியிட்டுள்ளார் என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க.விற்காக முன்னணி தொலைக்காட்சிகளின் விவாதங்களில் பங்கேற்று, மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக தீவிரமாக பேசி வருபவர் கே.டி.ராகவன் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
CM Vijay: முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget