சீமான் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க கோரி, கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பும் நோக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேசி வருவதாகவும், அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ள அந்த வீடியோக்கள் இணையத்தில் உள்ளது.
முன்னாள் முதல்வர் கலைஞரை விமர்சனம் செய்த சீமான் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி, கரூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்
கரூரை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் கரூர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பும் நோக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேசி வருவதாகவும், அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ள அந்த வீடியோக்கள் இணையத்தில் உள்ளது.
அதனை பார்க்கும் அனைவருக்கும் வருத்தத்தை உண்டாக்கும், அவர் மீது மதிப்பும், மரியாதையும் கொண்ட எனக்கு மிகுந்த மன வேதனை அளிப்பதால் சீமான் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவின் தன்மை குறித்து வருகின்ற 29.08.2024 அன்று கரூர் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.