மேலும் அறிய
Advertisement
நேற்றுதான் ஜாமினில் வெளியே வந்தார்! அதுக்குள்ள மீண்டும் சிறையா? - எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு புது சிக்கல்!
ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
கரூரில் அனுமதி இன்றி கூட்டத்தை கூட்டி தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 450 பேர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு.
சொத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் லைட்ஹவுஸ் பகுதியில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சிக்காக அனுமதி இன்றி கூட்டத்தைக் கூட்டி, போக்குவரத்தை தடுத்து நிறுத்தி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இரண்டு பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக மாவட்ட அவை தலைவர் திரு.வி.க உள்ளிட்ட 400 ஆண்கள் 50 பெண்கள் உள்ளிட்ட 450 பேர் மீது கரூர் மாநகர போலீசார் வழக்குப்பதிவு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion