மேலும் அறிய

கரூரில் அதிமுக கல்வெட்டில் ஓபிஎஸ் பெயரை மறைத்து கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது

அதிமுக பொதுக்குழு தீர்மானத்தில் ஏகமனதாக பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்த ஓபிஎஸ் பெயரை மறைத்து கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

அதிமுக வரலாற்றின் ஒற்றை தலைமைக்கு அதிகார போட்டி நடைபெற்று வந்த நிலையில், அதிக பெரும்பான்மையுடன் தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போது எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, நேற்றைய செயற்குழு, பொதுக்குழு தீர்மானத்தில் ஏக மனதாக இடைக்கால பொதுச் செயலாளராக, அதிமுகவில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் அதிமுக கல்வெட்டில் ஓபிஎஸ் பெயரை மறைத்து கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது

அதே நிலையில், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், ஓபிஎஸ் தனது நிர்வாகிகள் உடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, பின்னர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட அதிமுக நிர்வாகி இடையே சலசலப்பு, சண்டைக்கு காயமுற்றோரை முன்னாள் முதலமைச்சரும்  தற்போதைய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளமான எடப்பாடி கே.பழனிசாமி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். அதேபோல், ஓபிஎஸூம் தனது நிர்வாகிகளுடன் ஆலோசனையில்  ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பேருந்து நிலையம் அருகே அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதே நிலையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் புதிதாக பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் வெண்கல சிலையை திறந்து வைத்தார். அப்பொழுது, சிலை அருகே கல்வெட்டு பதிக்கப்பட்டிருந்தது. அப்பொழுது, அந்த கல்வெட்டில் சிலை திறப்பாளர் முதலமைச்சர்  எடப்பாடி  கே.பழனிசாமி என்ற பெயரும்,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  என்ற பெயரும், அதன் கீழே மத்திய நகரச் செயலாளர் நெடுஞ்செழியன், தெற்கு நகர செயலாளர் வி.சி.கே ஜெயராஜ் மற்றும் வடக்கு நகர செயலாளர் பாண்டியன் என்ற பெயரும் இடம்பெற்று இருந்தது.

கரூரில் அதிமுக கல்வெட்டில் ஓபிஎஸ் பெயரை மறைத்து கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது

பின்னர் ஆட்சி மாற்றம் காரணமாக வடக்கு செயலாளராக இருந்த பாண்டியன் திமுகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து, அந்த கல்வெட்டில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சென்னையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நிர்வாகிகள் ஒற்றை தீர்மானத்தின் படி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தனர். அதன்படி, தேர்வு செய்யப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்தை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அவருடன் சில அதிமுக நிர்வாகிகளையும் நீக்குவதாக அறிவித்தார். அவர் அறிவிப்பிற்கு ஏற்றவாறு பல்வேறு இடங்களில் ஓபிஎஸ் படம் கிழிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அதிமுக தலைமை மாவட்ட அலுவலகத்தில் இருந்த படங்கள் நீக்கப்பட்டது. இந்த நிலையில்  லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் வைத்து இருந்த சிலை திறப்பு விழா கல்வெட்டில் இருந்த ஓபிஎஸ் பெயர் மற்றும் பதவி கருப்பு ஸ்டிக்கரால் தற்போது மறைக்கப்பட்டுள்ளது. கரூரில் அதிமுக கல்வெட்டில் ஓபிஎஸ் பெயரை மறைத்து கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது

ஆனால், அந்த கல்வெட்டில் வடக்கு நகர அதிமுக செயலாளர் பாண்டியன் என்ற பெயரை முழுமையாக நீக்கி உள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
Embed widget