மேலும் அறிய

தேர்தலுக்காக பாஜகவும், காங்கிரசும் மேகதாது பிரச்னையை தூண்டிவிடுகின்றன - அன்புமணி குற்றச்சாட்டு

2.0 செயல்திட்டம் குறித்து இப்போது தெரிவித்தால், மற்றவர்கள் காப்பியடித்துவிடுவார்கள் - அன்புமணி ராமதாஸ்

திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு திருச்சி செல்லும் வழியில் கரூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். 

தேர்தலுக்காக பாஜகவும், காங்கிரசும் மேகதாது பிரச்னையை தூண்டிவிடுகின்றன  - அன்புமணி  குற்றச்சாட்டு

அப்போது பேசிய அவர், “காவிரி நீர்மேலாண்மை ஆணையம் விரைவில் கூடி அதில் கர்நாடக அரசு அனுப்பி வைத்த மேகதாது அணையின் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க உள்ளது. இது சட்டத்திற்கு எதிரானது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது, தமிழக நலனுக்கு எதிரானது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரானது. இந்த கூட்டம் நடைபெறக்கூடாது. அப்படி நடந்தாலும் மேகதாது பற்றி அதில் விவாதிக்க கூடாது. இதுதொடர்பாக தமிழக அரசிடம் மருத்துவர் ராமதாஸ் 5 நாட்களுக்கு முன் அறிக்கை மூலம் தெரிவித்தார். இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. காவிரி நீர்மேலாண்மை ஆணையர் ஒருதலைபட்சமாக செயல்பட்டுவருவதால் உடனே அவரை மாற்ற வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலுக்காக கர்நாடக பாஜகவும், காங்கிரசும் மேகதாது அணை பிரச்னையை தூண்டிவிட்டு கொண்டிருக்கிறார்கள். 

தேர்தலுக்காக பாஜகவும், காங்கிரசும் மேகதாது பிரச்னையை தூண்டிவிடுகின்றன  - அன்புமணி  குற்றச்சாட்டு

இந்த பிரச்னையில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழகத்தில் அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்தியில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர்கள் கர்நாடக அரசிற்கு சாதகமாக இருக்கும் சூழல் உள்ளது.  மேகதாது அணை வரவிடமாட்டோம்.  இதற்காக எந்த தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம். காவிரி ஆற்றில் மணல் எடுக்கும் திட்டம் தமிழக அரசுக்கு உள்ளதாக தெரிகிறது. காவிரி ஆறு நம் தாயை போன்றது. காவரியில் ஒருபிடி மணல் கூட எடுக்க விடமாட்டோம். எடுத்தால் மக்களை திரட்டி நானே போராடுவேன். மணல் எடுத்ததால் ஆற்றில் செல்லும் தண்ணீர் வாய்க்கால்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

தேர்தலுக்காக பாஜகவும், காங்கிரசும் மேகதாது பிரச்னையை தூண்டிவிடுகின்றன  - அன்புமணி  குற்றச்சாட்டு

ஆன்லைன், மது, போதைப்பழக்கம் ஆகிய மூன்றும் அடுத்த தலைமுறையினரை சீரழிக்கிறது. ஆன்லைன் விளையாட்டை தடை செய்யக்கோரி போராடியது பாமக மட்டும்தான். சென்னையில் போராட்டத்தை அறிவித்தோம். அப்போது தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டை நிபுணர் குழு அமைத்து தடை செய்வோம் என அறிவித்தனர். இதனை வரவேற்கிறோம். நாங்கள் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படுவோம். ஆனால், எதிரிகட்சியாக செயல்படமாட்டோம். எங்களது நோக்கம் தமிழக மக்களின் வளர்ச்சிதான். 

தேர்தலுக்காக பாஜகவும், காங்கிரசும் மேகதாது பிரச்னையை தூண்டிவிடுகின்றன  - அன்புமணி  குற்றச்சாட்டு

கரூர் மாவட்டத்தில் அதிகளவில் 24 மணி நேரமும் சந்துக்கடைகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இது ஆரோக்கியமான சூழல் கிடையாது. திமுக தேர்தலுக்கு முன் நாங்கள் வெற்றி பெற்றால் படிப்படியாக மதுவிலக்கு கொள்கைகளை அமல்படுத்துவோம் என்றனர். இதை அவர்கள் அமல்படுத்த வேண்டும். பார்கள் நடத்துவது சட்டவிரோதமானது. பார்களை மூடவேண்டும். போதைப்பழக்கங்கள் இளைஞர்களிடம் பரவி வருகிறது. இதைக்கட்டுப்படுத்த வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் 2.0 என்ற எங்களது கொள்கையை அமல்படுத்துவோம். பிஎம்கே 2.0 என்ற புதிய செயல்திட்டத்தை வடிவமைத்துள்ளோம். தமிழகம் சிங்கப்பூர், ஜப்பானிடம் போட்டியிட வேண்டும். அந்த அளவிற்கு செயல்திட்டத்தை கொண்டு வருவதே 2.0 திட்டம். இந்த திட்டத்தில் 2026-ல் தமிழகத்தில் பாமக ஆட்சி நடக்கும். 

2.0 செயல்திட்டம் குறித்து இப்போது தெரிவித்தால், மற்றவர்கள் காப்பியடித்துவிடுவார்கள். சட்டசபையில் எண்ணிக்கையில் அதிமுகதான் எதிர்கட்சி. ஆனால், செயல்திட்டத்திலும், அரசை செயல்பட வைத்து வெற்றிபெற வைக்கும் கட்சி பாமக மட்டும்தான். மற்ற கட்சிகளால் இதுபோன்ற வெற்றியை கிடைத்திருக்கிறதா? கோஷங்கள், எதிர்ப்புகளால் மட்டும் தமிழக மக்களுக்கு பயன் கிடைக்காது. ஒரேநாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் கிடையாது” என்றார்.

பேட்டியின் போது மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா, மாவட்டச் செயலாளர் பிரேம்நாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
Embed widget