மேலும் அறிய

MK Stalin Speech: என் தந்தைக்கு தாய் எழுப்பிய அன்பு கோட்டைதான் இந்த கலைஞர் கோட்டம்..!

Kalaignar Kottam: திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருவாரூரில் உள்ள காட்டூர் கிராமத்தில் கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு கோட்டத்தை பார்வையிட்டார். ரூ. 12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டத்தில், கருணாநிதி சிலை, முத்துவேலர் நூலகம், பழைய புகைப்படங்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ இந்த கலைஞர் கோட்டம், எனது தாய் தயாளு அம்மாள் அறக்கட்டளை மூலம் கட்டப்பட்டுள்ளது. இதனால் என் தந்தைக்கு தாய் எழுப்பிய அன்பு கோட்டையாகவே இந்த கலைஞர் கோட்டத்தினைப் பார்க்கிறேன்” என குறிப்பிட்டார். 

மேலும் அவர் தனது உரையில், “ நெஞ்சில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்திருக்ககூடிய நிலையில் நான் உங்கள் முன்பு நிற்கிறேன். வான் புகழ் வள்ளுவருக்கு தலைநகரில் கோட்டம் கண்ட கலைஞருக்கு திருவாரூரில் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. ஓடிவந்த பெண்ணே கேள் நீ தேடி வந்த கோழைநாடல்ல இது, என 13 வயதில் எந்த திருவாரூர் வீதிகளில் போர் பரணி பாடி வந்தாரோ அதே திருவாரூரில் கலைஞருக்கு கோட்டம் எழுப்பப்பட்டுள்ளது என கூறினார். 

மேலும், “ பாஜக கடந்த 10 ஆண்டுகளாக பரப்பிவரும் சர்வாதிகார காட்டுத்தீயை அணைக்க  வேண்டும். பாஜகவை மீண்டும் ஆள அனுமதித்தால் தமிழ்நாடே இல்லாமல் போகும். இந்தியாவும் இல்லாமல் போகும். ஜனநாயக போர்க்களத்தில் கலைஞரின் தளபதியாக பாட்னாவில் நடக்கும் ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளேன். மீண்டும் பாஜகவை ஆட்சி செய்ய அனுமதித்தால் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு இல்லாமல் போகும். தமிழ்நாட்டைப் போல் இந்தியா முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணி ஒற்றுமையாக இருப்பது அவசியம்” என பேசினார். 

மேலும், ”வரும் 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி வேண்டும், அதற்கு முன்னர் ஒற்றுமை வேண்டும் அதன் முன்னோட்டமாகத்தான் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஜனநாயக மாநாடு நடைபெறவுள்ளது”. 

சுவாரஸ்யமான செய்திகளுக்கு ஏபிபி நாடு டெலிகிராமில் இணைய இங்கு க்ளிக் செய்யவும் 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Embed widget