மேலும் அறிய

Congress in TVK alliance : கழற்றி விட தயாரான திமுக.?? தவெகவிற்கு பல்டி அடிக்கும் காங். - உறுதியாகும் புதிய கூட்டணி- நடப்பது என்ன.?

Congress in TVK alliance : தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில், திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வரும் நிலையில், தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் ஓரிரு வாரத்தில் அறிவிக்கவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக, தனது கூட்டணியை பலப்படுத்தும் வகையில் புதிய கட்சிகளை இணைத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த 4அரை வருடமாக திமுக கூட்டணியில் அமைதி காத்து வந்த காங்கிரஸ், தற்போது தேர்தல் நெருக்கத்தில் திமுகவின் கூட்டணி கனவிற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஆட்சியில் பங்கு வேண்டும், 41 தொகுதிகள் ஒதுக்க வேண்டும், 2 ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என விடாப்பிடியாக நின்றது. 

கூட்டணி ஆட்சி - திமுக அதிருப்தி

ஒரு கட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சமூகவலைதளத்தில் திமுக ஆட்சியில் பங்கு வேண்டும் என வெளிப்படையாகவே பதிவுகளை வெளியிட்டு வந்தனர். மேலும் ராகுல் காந்திக்கு நெருக்கமான காங்கிரஸ் நிர்வாகிகள் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனையையும் மேற்கொண்டு வந்தனர். இதனை சற்றும் ரசிக்காத திமுக, காங்கிரஸ் தலைமையிடம் புகார் தெரிவித்தது. ஆனால் அங்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து கூட்டணி ஆட்சி தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஒரு கட்டத்தில் திமுக- காங்கிரஸ் நிர்வாகிகள் யாருக்கு பலம் அதிகம் என நேரடியாகவே மோதிக்கொண்டனர்.

தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை.?

இதனால் கூட்டணி தொடருமா.? என்ற கேள்வி எழுந்த நிலையில், திமுக தரப்போ ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் எனவும், ஒரு ராஜ்யசபா சீட் தான் வழங்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. எனவே காங்கிரஸ் கட்சியே கூட்டணியில் இருந்து வெளியேறட்டும் என திமுக முடிவிற்கு வந்து விட்டதாகவே கூறப்படுகிறது. இதனை உணர்ந்த காங்கிரஸ் கட்சியும் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை திரைமறைவில் மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் தான் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் தவெகவுடன் பேசுவதையும் உறுதி செய்திருந்தார். 

விஜய்யுடன் கூட்டணி ஆலோசனை

அடுத்தக்கட்டமாக ராகுல்காந்தியின் தேர்தல் வியூக வகுப்பார்கள் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கூட்டணி ஆட்சி அமைக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ்- தவெக இடையிலான பேச்சுவார்த்தையில் அடுத்தக்கட்டத்தை நோக்கி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகல் வெளியாகியுள்ளது. எனவே நாளை அல்லது நாளை மறுதினம் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருக்குமா.? அல்லது வெளியேறுமா.? என தெரியவரும். 

 

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget