மேலும் அறிய

உங்களுக்கு ஏன் வலிக்கிறது ! பாஜக கூட்டணியில் இருப்பது எங்க விருப்பம் - சிவி சண்முகம் அதிரடி

அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டதிலிருந்து ஸ்டாலினுக்கு தூக்கம் போச்சு இந்தியாவை பதினோறு ஆண்டுகள் ஆண்டு கொண்டிருக்கிற ஒரு பிரதமராக மோடி இருக்கிறார்

விழுப்புரம் : எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கையை ஏற்று மோடி வரியை குறைத்துள்ளதாகவும் அதிமுக தலைமை அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவர்களை ஏன் கட்சியில் சேர்க்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் அருகேயுள்ள திருவாமாத்தூரில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போகின்ற இடமெல்லாம் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஸ்டாலின் தெரிவிப்பதாகவும், திராவிட மாடல் ஆட்சியில் ஒரே குடும்பமான கோபாலபுரத்து குடும்பம் மட்டுமே நல்லா இருப்பதாகவும், நகை கடன் தள்ளுபடி என கூறிவிட்டு அதனை தள்ளுபடி செய்யவில்லை, தேர்தல் வருவதினால் நகை கடன் தள்ளுபடி என திமுக கூற தயாராக உள்ளதாவும், ஸ்டாலின் ஆட்சியில் நகை விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

திருமணமாகாத பெண்களுக்கு திருமண உதவி தொகையாக அரை சவரன் தங்க நகை அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. எந்த திட்டங்கள் போட்டாலும் பெண்களை முன்னிறுத்தி ஜெயலலிதா திட்டங்களை செயல்படுத்தினார்.  தமிழகத்தில் ஸ்டாலின் தான் வாராரு எல்லாத்தையும் அள்ளிட்டு போய்ட்டாரு, தமிழகத்தில் விலைவாசியை உயர்த்தி உள்ளதாகவும், ஸ்டாலின் ஆட்சியில் கூலியும் சம்பளமும் உயரவில்லை ஆனால் ஊழல் மட்டும் உயர்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். எல்லாவற்றை பற்றியும் ஸ்டாலின் பேசுகிறார். ஆனால் சட்ட ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது கற்பழிப்பு சம்பவங்கள் குறித்தும் மக்களை பற்றி பேசுவதில்லை, சமூக நீதி என்கிறார்கள் ஆனால் திமுகவில் இவர்கள் குடும்பத்தினரை தவிர வேறு யாரு முதலமைச்சராக அந்த இயக்கத்தில் வர முடியாது, சாதாரண தொண்டனாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் பொதுச்செயலாளராக வந்துள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டதிலிருந்து ஸ்டாலினுக்கு தூக்கம் போச்சு இந்தியாவை பதினோறு ஆண்டுகள் ஆண்டு கொண்டிருக்கிற ஒரு பிரதமராக மோடி இருக்கிறார். உலக நாடுகளே திரும்பி பார்க்க பிரதமராகவும் பாகிஸ்தானில் போர் புரிந்து வெற்றி கண்டவராக மோடி இருக்கிறார். பாஜக அதிமுக குறித்து பேச ஸ்டாலினுக்கு எந்த தகுதி இருக்கிறது, இன்றைக்கு எல்லா வரிகளும் குறைக்கப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் உயிர்காக்கும் மருந்துக்கு வரி இல்லைபொருட்கள் சிமெண்ட்டுக்கு வரி விதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.

பால் பொருட்களுக்கு வரி இல்லை, எடப்பாடி.பழனிச்சாமி கோரிக்கையை ஏற்று மோடி வரியை குறைத்துள்ளதாக தெரிவித்தார். நேற்று முதல் வரி குறைந்துவிட்டது, இப்போது பொது மக்கள் பொருட்கள் வாங்கலாம், வரி குறைப்பு ஏழை, எளிய மக்களுக்கு சென்று சேர்ந்ததா என பார்ப்பதே என் வேலை என மோடி கூறியுள்ளார். 

அத்தியாவசிய பொருட்களின் வரியை ஐந்து சதவீதமாக மோடி குறைத்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத இடமே இல்லை இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை வேலை நிரந்தரம் கோரி சென்னையில் போராட்டம் நடத்திய போது முதல்வர் ஸ்டாலின் ரஜினி படம் பார்த்துக் கொண்டிருந்தார். முதல்வர் வெளிநாட்டில் என்ன செய்தார் என கேட்க பத்திரிகையாளர்களுக்கு தைரியம் இல்லை. பாஜக கூட்டணியில் இருப்பது எங்க விருப்பம். உங்களுக்கு ஏன் வலிக்கிறது.

அதிமுக எத்தனை பிரிவாக இருந்தால் உங்களுக்கு என்ன, அதிமுக தலைமை அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவரை கட்சியில் ஏன் சேர்க்க வேண்டும், மோடியும், அதிமுகவிற்கும் நல்ல பெயர் வந்துவிட கூடாது என ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு மறைப்பதாகவும், எடப்பாடி.பழனிச்சாமி ஏழை விவசாயி இன்றைக்கும் சேலத்தில் விவசயாம் செய்து வருகிறார். மக்கள் வரிப்பத்தில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா ஸ்டாலின் எடுப்பதாகவும் சன் டிவி சம்பாதிக்க இளையராஜாவை பயன்படுத்திக் கொண்டதாக சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget