மேலும் அறிய

Annamalai Politics : அரசியலில் இருந்து ஓய்வா.? என்ன சொல்லப்போகிறார் அண்ணாமலை.!பாஜகவினருக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்

Annamalai political journey : தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தனது அடுத்தக்கட்ட அரசியல் பயணமா.? அல்லது அரசியலில் இருந்து ஓய்வா என்ற முடிவை இன்று மதியம் அறிவிக்கவுள்ளார்.

தமிழகத்தை குறிவைத்த பாஜக தலைமை

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் ஆதிக்கத்தை செலுத்தி வரும் பாஜக  தமிழகத்தில்  ஒரே ஒரு இடத்தில் மட்டும் பாஜக வெற்றி பெற்று படு தோல்வியை சந்தித்துள்ளது. அந்த வகையில் எத்தனை மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்தாலும் தமிழகத்தில் திண்டாட வேண்டிய நிலை தான் உள்ளது. இதனை உடைத்தெறிக்க வேண்டும் என தமிழகத்தின் மீது தேசிய தலைமை பார்வையை திருப்பியது. அந்த வகையில் தமிழக பாஜக தலைவர்களாக தமிழிசை, எல்.முருகன் என அடுத்தடுத்த தலைவர்கள் நியமித்தது. அடுத்தாக கடந்த 2021ஆம் ஆண்டு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக தேசிய தலைமை நியமித்தது. இதனையடுத்து அண்ணாமலையின் அதிரடி அரசியல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. 

அண்ணாமலையின் தமிழக அரசியல்

தமிழகம் முழுவதும் பாஜகவின் வளர்ச்சியை பெற்றது. ஏராளமான இளைஞர்கள் அண்ணாமலைக்கு பின் திரண்டனர். பாஜகவை தாண்டி அண்ணாமலைக்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவானது. கடந்த திமுக ஆட்சியில்  அரசுக்கு கடும் சவாலாக அண்ணாமலை இருந்து வந்தார். தினந்தோறும் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஆடியோ வெளியிடுவது, வீடியோ வெளியிடுவது, ஆவணங்களை வெளியிடுவது என திமுக அரசை டார்கெட் செய்து அடித்து ஆட ஆரம்பித்தார் அண்ணாமலை, இதனால் தமிழகத்தில் எதிர்கட்சி பாஜகவா.? அதிமுகவா.? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தான் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிட்ட நிலையில், அண்ணாமலையின் பேச்சால் அதிமுக- பாஜக கூட்டணி உடைந்தது. இதனையடுத்து இரண்டு கட்சிகள் தனி அணியாக தேர்தலை எதிர்கொண்ட நிலையில், அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை பெற்றது. 

அதிமுக- பாஜக கூட்டணி

இருந்த போதும் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்தது. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டது. இதற்கு அண்ணாமலை இடையூறாக இருந்த நிலையில், அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய பாஜக தேசிய தலைமை நயினார் நாகேந்திரனை பாஜக தலைவராக அறிவித்தது. இதனையடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 34 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு  1 தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சற்று காலம் அமைதி காத்திருந்த அண்ணாமலை பாஜகவிற்கு எதிராக தனது நிலைப்பாட்டை எடுத்தார். பாஜகவில் இருந்து விலக இருப்பதாகவும் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கு ஏற்ப டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபியிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனையடுத்து அமித்ஷாவை சந்தித்து பாஜகவில் இருந்து விலகும் முடிவை தெரிவித்தார்.

பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை

ஆனால் அமித்ஷா சற்று காத்திருக்கும் படி அண்ணாமலையிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் எந்த வித முடிவும் தேசிய தலைமை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் தனது சமூக வலைதளத்தின் மூலம் தனது அடுத்தக்கட்ட அரசியல் பயணம் தொடர்பாக அறிவிக்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.

 இன்று மதியம் 12:00 மணி அளவில்  அண்ணாமலை  சமூக ஊடகம் வாயிலாக மனம் திறந்து பேச இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் அண்ணாமலையின் முன்பு இரண்டு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒன்றை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் படி புதிய மக்கள் இயக்கத்தை தொடங்குவது என்ற அறிவிப்பை வெளியிட இருப்பதாக பெரும்பாலான கருத்துகள் கூறப்படுகிறது. அதே நேரம், தீவிர அரசியலில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போகிறேன் என அறிவிப்பார் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.  ஒரு தனி கட்சியோ அல்லது தனி இயக்கமோ தொடங்குவது என்றால் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அறிவிப்பை வெளியிட்டு கேள்வி பதில்களை எதிர்கொள்வார்.

அரசியலில் இருந்து ஓய்வா.?

ஆனால் எந்தவித கேள்விகளையும் எதிர்கொள்ளாமல் சமூக வலைதளத்தில் தனது மனதில் உள்ள கருத்துகளை மட்டும் கூறுவதென்றால் சிறிது காலம் ஓய்வு என்ற முடிவை அண்ணாமலை அறிவிப்பார் என தகவல் கூறப்படுகிறது. எனவே அண்ணாமலையின் அடுத்தக்கட்ட திட்டம் தொடர்பாக இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கவுள்ளார். இதனை பாஜகவினர் மட்டுமில்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்நோக்கி காத்துள்ளது. அதே நேரம் பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகும்பட்சத்தில் தமிழக பாஜக பெரிய அளவில் இழப்புகளை சந்திக்கும் நிலை உருவாகும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு பறந்த அவசர உத்தரவு!
நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு அவசர உத்தரவு!
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget