மேலும் அறிய

இடைக்கால பொதுச்செயலாளராக, ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை..!

இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் தமிழ்மகன் உசைன், கேபி. முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகிறார். இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் தமிழ்மகன் உசைன், கேபி. முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இடைக்கால பொதுச்செயலாளர் : 

அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை வரவேற்கும் விதமாக கரூர் மாவட்ட பேருந்து நிலையம் அருகே அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொதுச் செயலாளர் எடப்பாடி வாழ்க என்ற கோஷங்களோடு பட்டாசுகள் வெடித்து, இனிப்புகளை வழங்கி தங்களது கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று சென்னையில் இபிஎஸ் ஏற்பாட்டில் செயற்குழு மற்றும் பொதுக் குழு நடைபெற தேதி குறிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், ஓபிஎஸ் நிர்வாகிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 9 மணி அளவில் கூறப்படும் என அறிவித்திருந்த நிலையில் 9 மணிக்கு தீர்ப்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தலாம் என இபிஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. 

அதை தொடர்ந்து பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு முன்பாக சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் கற்களை வீசிக்கொண்டு அந்த இடத்தை கலவர பூமி ஆக்கினர்.  நீண்ட இடைவெளிக்கு பிறகு ஓபிஎஸ் அதிமுக தலைமையகத்திற்கு வந்து சேர்ந்தார். ஓபிஎஸ் அதிமுக தலைமையகத்திலும், இபிஎஸ் பொதுக்குழு நடைபெறும் இடத்திலும் இருந்தனர். அதை தொடர்ந்து செயற்குழு, பொதுக்குழுவில் ஏக மனதாக அதிமுக சட்ட விதிகளை மாற்றி அமைத்து, தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி கே .பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 
அதற்கு கூட்டத்தில் ஏக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கரூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பாக பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் பேருந்து நிலையம் அருகே நூற்றுக்கு மேற்பட்ட அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
Embed widget