மேலும் அறிய

"தமிழகத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பதே போலி மது தான்" - கே.பி.ராமலிங்கம்

அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் 40% போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது சேலத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் பேட்டி.

தமிழகத்தில் கள்ளச்சார விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசு பதவி விலக வேண்டும் என தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், வேலூர் இப்ராஹிம் மற்றும் பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறுகையில், "கள்ள சாராயம் குடித்து 22 நபர்கள் உயிரிழந்த சம்பவம் இதுவே முதல் முறை. மதுவிலக்கு அமல்படுத்தியிருந்த காலகட்டத்தில் கூட இதுபோன்ற உயிரிழப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் தற்போது சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இரவிலும் கட்டுப்பட்டை மீறி மது விற்பனை நடைபெறுகிறது. மது கடைகள் மூடிய பிறகும் விடிய விடிய மது விற்பனை நடைபெறுகிறது. மேலும் தமிழக முழுவதும் சந்துக்கடை என்று திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்களை நடத்தி வருகிறார்கள். அவர்களே மது விற்பனை செய்து வருகிறார்கள்.

அப்படி இருந்தும் எப்படி தமிழகத்தில் இவ்வளவு கள்ள சாராயம் பெருகி உள்ளது என்ற கேள்வி இன்று அனைவரும் மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால் தமிழகத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பதே போலி மது தான். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்கப்படும் மது பாட்டில்கள் போலியானவை வருமானத்தை குறைப்பதற்காக வரியை ஏய்ப்பதற்காக ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் 40 சதவீதமான 

மது பாட்டில்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வராமல் வெளிப்பகுதிகளில் இருந்து வருகிறது. அதனை பார்கள் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறார்கள். இதற்கு பெயர் தான் கரூர் கும்பல் என்று சொல்லி வருகிறது. அரசாங்கமே போலி மதுவை கொடுக்கும் பொழுது நாம் ஏன் நல்ல சாராயத்தை குடிக்க கூடாது என்று தான் அவர்கள் இன்றைக்கு விலை குறைவான சாராயத்தை வாங்கி குடிப்பதற்கு தயாராகி விட்டார்கள். இந்த நிலை தொடரக்கூடாது. முற்றுப்புள்ளி உடனடியாக வைக்க வேண்டும் கள்ள சாராயத்தை மட்டும் தடுக்க கூடாது. அரசு மதுபான கடைகளில் விற்கப்படும் போலி மதுவையும் தடுத்திட வேண்டும்" என்றார்.

சாராயத்தை மட்டுமே நம்பி நடத்தப்படும் இந்த அரசாங்கம் மிக விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படும் என்றார். மாநிலத்தின் உரிமை திராவிட மாடல் உரிமை இதுதான் திராவிட மாடல் உரிமையில் மத்திய அரசு தலையிடுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றார். அவர்கள் தான் அதிக அதிகாரம் படைத்தவர்கள் வானாகிய அதிகாரம் படைத்தவர்கள். இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்ற பொழுது மட்டும் மத்திய அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. இவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்திற்கு, அடாவடிக்கும், அராஜகத்திற்கும் ஊழலுக்கும் எப்படி நாங்கள் பங்கு பெற முடியும். இன்றைக்கு இருக்கக்கூடிய அரசாங்கம் ஊழல் அரசாங்கம் சாராயத்தை திருடி தன்னுடைய குடும்பத்தை வளர்த்துக் கொள்கின்ற அரசாங்கம் சாராயத்தில் ஏழை எளிய மக்களை கொன்று விட்டு அதில் கிடைக்கும் 30 சதவீத கமிஷன் தொகையை வைத்து தன்னுடைய குடும்பத்தை நடத்தும். இந்த அரசு கேடுகெட்ட குடும்பமாக இருப்பது தான் இந்த அரசாங்கம். முதலமைச்சரின் இவ்வளவு பணமும் சொல்கிறது. ஒரு கேடுகெட்ட இவர்கள் பிணத்திலிருந்து பணத்தை எடுத்து தின்றும் நபர்களுக்கும் இந்த முதலமைச்சரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் கிடையாது என்றார். சாராயத்தில் வரும் வருமானத்தை வைத்து வாழ்கின்ற குடும்பம் எத்தனை நாட்களுக்கு உருப்படி ஆகும் என்று விமர்சனம் செய்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget