மேலும் அறிய
Advertisement
"என் மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பு பேட்டி
"உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகள் படுகொலை ஈவு இரக்கமற்ற கோரப் படுகொலை. தாலிபான்கள் செயல்பாடுகளை போல் இங்கு செய்து உள்ளனர் இதற்கு மன்னிப்பே கிடையாது'’
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் தென்காசி மாவட்டத்தை பொருத்த வரையில் 06.10.2021 தேதி ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாகவும், 09.10.2021 அன்று தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் ஆகிய ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் அக்டோபர் 6ஆம் தேதி ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு மட்டும் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. இந்நிலையில் அக்டோபர் 9ம் தேதியான இன்று தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், கடையநல்லூர், குருவிகுளம் ஆகிய ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டி மதிமுக பொது செயலாளர் வைகோவின் கிராமம் ஆகும். ஒவ்வொரு தேர்தலுக்கும் வைகோ மற்றும் அவரது குடும்பத்தினர் கலிங்கப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை பதிவு செய்வது வழக்கம். அதேபோன்று இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவினை முன்னிட்டு இன்று தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்ய கலிங்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கினை பதிவு செய்தனர்.
பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :
நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக வெற்றி பெறும் என்றும், என் மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. என் 56 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் கஷ்டப்பட்டிருக்கிறேன். 28 ஆண்டு காலம் லட்சக்கணக்கான கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டிருக்கிறேன்,
நூற்றுக்கணக்கான போராட்டங்கள், 5.5 ஆண்டுகாலம் ஜெயில் வாழ்க்கை என அரசியலில் என் வாழ்க்கையை அழித்திருக்கிறேன். அரசியல் என்னோடு போகட்டும். என் மகன் வந்து கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை.
எனவே அவர் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. அவர் அரசியலுக்கு வருவதை 20 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கட்சிக் குழு கூட்டம் முடிவு செய்யும் எனக் கூறியுள்ளார். மேலும் உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த விவசாயிகள் படுகொலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகள் படுகொலை ஈவு இரக்கமற்ற கோரப் படுகொலை. தாலிபான்கள் செயல்பாடுகளை போல் இங்கு செய்து உள்ளனர் இதற்கு மன்னிப்பே கிடையாது நீதிமன்றத்தை கூட அவர்கள் மதிக்கவில்லை" எனவும் கூறியுள்ளார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion