மேலும் அறிய

பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை?....அரசியல் ரீதியாக பதில் அளிக்க முடியாது - ஆளுநர் தமிழிசை

"பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “நான் ஆளுநராக இருப்பதால் அரசியல் ரீதியாக பதில் அளிக்க முடியாது” - ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்ற G20 சின்னம் காட்சிப்படுத்துதல் நிகழ்ச்சியை துணைநிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் G20 செல்ஃபி மையம்  திறந்து வைத்து, வெளிப்புற விளம்பர பதாகைகள் , G20 அடையாள வில்லை , சுவரொட்டி  ஆகியவற்றை வெளியிட்டார்.

ஆளுநர் தமிழிசை பேசியதாவது :-

ஜி20 மாநாடு பாரத பிரதமரின் கனவு திட்டம். ஜி 20 மாநாட்டுக்கு இந்திய தலைமை தாங்க வேண்டும் என்ற நிலை வந்த போது அது டெல்லியில் மட்டுமே நடைபெறும் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அத்தனை மாநிலங்களுக்கும் அதற்கான வாய்ப்பைத் தரவேண்டும் என்று வாய்ப்பு அளித்ததற்கு பிரதமருக்கு நன்றி. மற்ற நாடுகளில் மாநாடு நடைபெறும் போது அந்தந்த தலைநகரங்களில் தான் நடைபெற்றது. அதில் தொடக்க நிலையில் நடைபெறும் முதல் மாநாடு புதுச்சேரியில் நடைபெற இருக்கிறது என்பது சிறப்பு. ஜனவரி 31ம் தேதி மகாத்மா காந்தி நினைவு தினத்தோடு இணைந்து வருவது நமக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.

பாரதப் பிரதமர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் போகும்போது அதுபற்றி விமர்சனம் அதிக அளவில் வந்தது. ஆனால் அவர் வெளிநாடுகளுக்கு சென்றது கொரோனா நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து நமக்கு கிடைத்த உதவி, நம்மால் வெளிநாடுகளுக்கு கிடைத்த உதவி, ஜி20 மாநாட்டின் தலைமை நிலை நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு. ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் இந்தியாவின் முடிவு இல்லாமல் முடிவு எடுக்க முடியாது என்ற பிரம்மாண்டமான நிலையை மத்திய ஆட்சி இந்தியாவுக்கு ஏற்படுத்தி தந்திருக்கிறது. இப்போது வளர்ந்து வரும் நாடு என்ற பெயரைப் இந்தியா பெற்றிருக்கிறது. பிரதமர் இந்தியா 2030 க்குள் ஐந்து டிரில்லியன் நாடாக பொருளாதார நிலையை அடைய வேண்டும் என கடுமையான இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி நாம் பயணம் செய்ய வேண்டும். அந்த பயணம் நிச்சயமாக வெற்றிகரமாக தான் தரும் என்று சொன்னார் என கூறினார்.

மேலும் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நடிகை காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். காயத்ரி ரகுராமின் குற்றச்சாட்டு குறித்து ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது, நான் ஆளுநராக இருப்பதால் அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று ஆளுநர் தமிழிசை கூறினார் . 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget