மேலும் அறிய

நம்மை அழகா வெச்சுக்குறது, இதுக்காகத்தான்.. பதில் கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.,

என் ஊரில் மரத்தடியில் கரிசல் மண்ணில் இருந்து ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படித்த கரிசல் தமிழச்சிதான் நான். என் ஊரைப் பொறுத்தவரை நான் என்றும் 'செமதி'தான்.

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் எம்பியும் கவிஞருமான தமிழச்சி தங்கபாண்டியன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அரசியல் தாண்டிய விஷயங்களை பேசினார். தமிழச்சி தங்கபாண்டியன் பற்றி பேசுகையில் எல்லோருக்கும் அவருடைய உடைகள் ஞாபகம் வரும். இந்த வயதிலும் தன்னை சீரான அழகுடன் காண்பித்துக்கொள்ளும்தன்மை உடையவர். அது குறித்து கேட்கையில், "நம்மை அழகாக வெளியில் காட்டுவது என்பது ரசனை சார்ந்தது. அது எந்த ஆணையோ வேறு யாரையோ கவர்வதற்காக அல்ல. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட ரசனை மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயம். நாம் எல்லா நாளும் ஒரே மாதிரியானது அல்ல, ஒவ்வொரு நாளும் பூக்கும் பூ போல. ஒவ்வொரு நாளும் வித்யாசமாக நமக்கு பிடித்தார்போல் நம்மை வெளிப்படுத்திக்கொள்வது நமது தன்னம்பிக்கையை அதிகரிக்கும், வாழ்வின் மீதான காதலை அதிகரிக்கும்.

என் ஊரில் மரத்தடியில் கரிசல் மண்ணில் இருந்து ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படித்த கரிசல் தமிழச்சிதான் நான். அதுதான் இன்னும் இந்து தோலுக்குள் உள்ளது. என் ஊரைப் பொறுத்தவரை நான் 'செமதி'தான்.

நம்மை அழகா வெச்சுக்குறது, இதுக்காகத்தான்..  பதில் கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.,

அவர்களுக்கு சுமதி என்று கூப்பிட வராது. அவர்களுக்கு நான் இப்போதும் அதே செமதிதான். ஏதோ பாப்பா புக் போடுது, இங்கங்க போயி பேசுது அவ்வளவுதான். இப்போ எம்பி ஆனதனால் என்னிடம் சொன்னால் கொண்டு போய் சேர்க்கலாம் பிரச்சனைகளை என்று நினைப்பார்களே தவிர, நான் இன்றும் அவர்களுடைய செமதிதான். " என்றார். அவருடைய புத்தக வாசிப்பு பற்றி கேட்கையில், "முன்பைப்போல இப்போது அதிக நேரம் ஒதுக்கி படிக்க முடியவில்லைதான். ஆனால் எப்படியோ நேரத்தை உருவாக்கிக்கொள்கிறேன். ஒரு மணிநேரம் முன்னதாக எழுவது. ஒரு மணி நேரம் தாமதமாக உறங்குவது என்று நேரம் ஒதுக்கி புத்தகங்கள் படிக்க முயல்கிறேன். ஆனால் கட்டாயப்படுத்தி படித்தே ஆகவேண்டும் என்று என் உடலையும் மனதையும் வற்புறுத்துவது இல்லை.

ஒரு நாளைக்கு 6 மீட்டிங் சென்றால் மனது சோர்வடைந்துவிடுகிறது. அந்த நாட்களில் கண்டிப்பாக படித்தே ஆகவேண்டும் என்பது இல்லை, ஆனால் பெரும்பாலும் படிப்பதற்கு நேரம் ஒதுக்கிவிடுவேன். படிப்பதை நிறுத்துவது உயிர்வாழ்வதை நிறுத்துவதற்கு சமம். ஜென், லாசா, தாவோ, நம்முடைய சித்தர்களுடய புத்தகங்கள் அதிகம் படிப்பேன்.

நம்மை அழகா வெச்சுக்குறது, இதுக்காகத்தான்..  பதில் கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.,

இப்போது ஒரு ஐந்து ஆறு வருடங்களாக சமூகம் சார்ந்த புத்தகங்கள், சமூக நீதி சார்ந்த புத்தகங்கள் படிக்க ஆரம்பித்துள்ளேன். ஆனால் பொதுவாக எனக்கு அதிக ஆர்வமுள்ள பகுதி கவிதைகள், மொழிபெயர்ப்பு கவிதைகள், மொழிபெயர்ப்பு நாவல்கள், புதிதாக வரும் தற்கால புத்தகங்கள்தான். நான் நிறைய சினிமாக்கள் பார்ப்பேன். மிஷ்கின் பாலா எல்லாரும் பல நல்ல திரைப்படங்கள் பரிந்துரைப்பார்கள். உலக சினிமா என்றில்லாமல், எம்ஜிஆர் படங்கள் எல்லாம் எங்கள் ஊர் சினிமா கொட்டகைகளில் அமர்ந்து பார்ப்பதற்கு மிகவும் பிடிக்கும்.

பொதுவாகவே தியேட்டரில் பார்ப்பதை விரும்புவேன். தற்போது பிடித்த நடிகர் என்றால் விஜய் சேதுபதி. ஒவ்வொரு காலத்திலும் மாறும். கமல் ஒரு அற்புதமான கலைஞன். ரஜினி அவர்களின் ஹ்யூமர் சென்ஸ் ரொம்ப பிடிக்கும்." என்று கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
Embed widget