மேலும் அறிய

PM Modi : "வாரண்டி இல்லாதவர்கள் கொடுக்கும் கேரண்டி," காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளை கடுமையாக விமர்சித்த மோடி!

"முன்பு ராமரைப் பூட்டிய காங்கிரஸ், இப்போது 'ஜெய் பஜ்ரங் பலி' என்று கோஷமிடுபவர்களை அடைக்க நினைக்கின்றனர்.

கர்நாடக தேர்தல் அறிக்கையில் ஹனுமானை வழிபடுபவர்களை அடைத்து வைக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக, பஜ்ரங் தளத்தை தடை செய்ய முன்வந்துள்ள காங்கிரஸ் கட்சியை பிரதமர் நரேந்திர மோடி தாக்கி பேசியுள்ளார்.

இப்போது அனுமன் பிரச்சனையாக உள்ளார்

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், கர்நாடகாவில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அங்கு பிரச்சாரத்தில் உள்ள பிரதமர் மோடி, தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை (பிஎஃப்ஐ) விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) இளைஞர் பிரிவான பஜ்ரங் தளத்துடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சியை அவர் காங்கிரஸ் கட்சியை மேலும் விமர்சித்தார்.

"முன்னர் காங்கிரஸுக்கு ராமர் பிரச்சனையாக இருந்தார், இப்பது ஹனுமான் பிரச்சனையாக இருக்கிறார். முன்பு ராமரைப் பூட்டிய காங்கிரஸ், இப்போது 'ஜெய் பஜ்ரங் பலி' என்று கோஷமிடுபவர்களை அடைக்க நினைக்கின்றனர். அவர்கள் ஹனுமனை ஒரு பிரச்சினையாக மாற்றி, தேர்தல் அறிக்கையில் அடைத்துள்ளனர். அதனால்தான் பஜ்ரங் தளம் அமைப்பு தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர். நான் இன்று ஹனுமனின் பூமியின் காலடி எடுத்துவைத்த அதே நாளில் காங்கிரஸின் இந்த மோசமான அறிவிப்பு வெளியாகியுள்ளது," என்று பாஜக பேரணியில் பிரதமர் கூறினார்.

PM Modi :

வாரண்டி இல்லாதவர்கள் கொடுக்கும் கேரண்டி

"ஒரு தொழிற்சாலையில் ஒரு பொருள் தயாரிக்கும்போது அதற்கு வாரன்டி குறிப்பிடப்படுவது வழக்கம். வாரன்டி முடிந்துவிட்டால் அந்த பொருளுக்கு என்ன ஆனாலும் அந்தத் தயாரிப்பு நிறுவனம் பொறுப்பாகாது. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் வாரன்டி முடிந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி மக்களிடையே இருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது. அதனால், அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்றெல்லாம் காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறது. இவை அனைத்தும் வாரன்டி இல்லாதவர்கள் கொடுக்கும் கேரன்டி. எல்லாமே பொய்," என்று பேசியுள்ளார் மோடி.

தொடர்புடைய செய்திகள்: LSG vs CSK IPL 2023: லக்னோவில் ராசியில்லாத லக்னோ அணி.. வெற்றியை வசமாக்குமா சென்னை..? யாருக்கு வாய்ப்பு?

இந்துத்துவா டிரம்ப் கார்டு

விஜயநகர மாவட்டத்தில் தேர்தல் பேரணியில் உரையாற்றிய மோடி, அந்த இடத்துக்கும் ஹனுமானுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பேசியபோது இந்துத்துவா டிரம்ப் கார்டை எடுத்து பயன்படுத்தினார். பஜ்ரங் தளம் மற்றும் PFI போன்ற பிரிவினைவாத சக்திகளை ஒடுக்குவது என்று குறிப்பிட்டுள்ள கர்நாடக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு காங்கிரஸ் மீதான அவரது தாக்குதல் வந்துள்ளது. 

PM Modi :

தீவிரவாத ஆதரவு கட்சி

மேலும் பேசிய மோடி, "காங்கிரஸ் கட்சி எப்போதுமே தீவிரவாதிகளுக்கும் தீவிரவாதத்திற்கும் ஆதாவாக பேசும். நாட்டின் பாதுகாப்பு துறையையே, கேள்விக்குள்ளாக்கிய வரலாறு கொண்ட கட்சிதான் காங்கிரஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டபோது கண்ணீர் விட்டவர்கள் யார் என்று ஞாபகம் இருக்கிறதா? காங்கிரஸ் தலைவர்கள் தானே. அதே போல இந்த மாநிலத்திலும் காங்கிரஸ் தலைவர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நிற்கின்றனர். வெளியில் இருந்து பார்த்தால் காங்கிரஸும், ஜே.டி.எஸ். கட்சியும் வெவ்வேறு கட்சிகளாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் இரண்டும் ஒன்றுதான். இரண்டு கட்சிகளுமே குடும்ப அரசியலையும் செய்கின்றன, ஊழலையும் செய்கின்றன," என்று கடுமையாக விமர்சித்திருந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget