மேலும் அறிய

Free Bus For Women: செங்கல்பட்டு மாவட்டத்தில் 4.31 கோடி பெண்கள் பயன்..! ஆச்சரியம் அளிக்கும் டேட்டா..!

free bus scheme : "செங்கல்பட்டு மாவட்டத்தில் 4,31,92,978 பயனாளிகள் பயனடைந்துள்ளனர் "

விடியல் பயணம் – மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 4,31,92,978 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து  - Free Bus Scheme 

மகளிர்க்கு இலவச பேருந்து புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களில் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாக மகளிர் இலவச பேருந்து, திட்டம் பார்க்கப்படுகிறது.அவ்வப்பொழுது தமிழ்நாடு முதலமைச்சரும் இந்த திட்டம் குறித்து மேடைகளில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டம் மூலம் பெரும்பாலும் வேலைக்கு செல்லும் பெண்கள் பயனடைவதாகவும், அவர்களுடைய மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை, பாதுகாக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. ஒருபுறம் இலவச பயணம் வேண்டாம் என ஒரு சில பெண்கள் ஆரம்ப காலகட்டத்தில், எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் எவ்வளவு நபர்கள் பயனடைந்துள்ளார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

4 கோடி 31 லட்சம் பெண்கள் பயன்

செங்கல்பட்டு மாவட்டத்தில் விடியல் பயணம் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் மூலம் இது நாள் வரையில் பெண்கள் – 4,27,64,887, திருநங்கைகள் – 42,231, மாற்றுத்திறனாளிகள் – 3,53,947, மாற்றுத்திறனாளிகளுடன் வருபவர்கள் – 31,913 என மொத்தம் – 4,31,92,978 நபர்கள் பயனடைந்துள்ளனர். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.

 மாநகரப் பேருந்துகளில் அதிகப்பயணம்

இதில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்திட்டத்தில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் இல்லத்தரசிகள், உயர் கல்வி பயிலும் மாணவிகள், பணிபுரியும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லா பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்துள்ளதாக பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்த வரையில் அனைத்து தரப்பு மக்களிடமும் மாநகர பேருந்து மற்றும் நகர பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் மிகுந்த வரவேற்பு அடைந்துள்ளது.

 பயன் அடைபவர்கள் யார் யார்?

பணிபுரியும் பெண்கள் மட்டுமின்றி, சுயதொழில் செய்யும் பெண்கள், இலவச பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள், குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் தாய்மார்கள், குழந்தைகளை நாள்தோறும் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லும் பெண்கள், வயதான முதியவர்கள் மற்றும் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டம் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது.

 பெண்கள் சொல்வது என்ன ?

இதுகுறித்து கட்டணமில்லா பேருந்து பயணி ஒருவர் கூறுகையில் : ஏழை குடும்பத்தை சார்ந்த எங்களுக்கு இத்திட்டத்தை அறிவித்ததன் காரணமாக தினமும் பயனுள்ளதாக இருக்கிறது. மாதந்தோறும் பேருந்து செலவிற்காக ரூ.1500/–க்கும் மேல் செலவழித்து வந்த நிலையில், தற்போது போக்குவரத்து செலவான ரூ.1500/–க்கும் மேலான தொகை எனக்கு மிச்சமாகிறது.

இந்த திட்டம் எனக்கும் என்னை போன்று பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஏழை குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. எனது பயணம் தொடரவும், இதன் மூலம் வருங்காலம் சிறக்கவும் செய்த தமிழக அரசிற்கு எனது சார்பாகவும், எனது குடும்பத்தினர் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொது போக்குவரத்து பயணங்கள் ஊக்குவிப்பதும், பெண்கள் சமூக பொருளாதாரத்திற்கு உகந்ததாக அமைந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களிடமும் மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE:நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Breaking News LIVE: நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Embed widget